Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அலங்கோலம்".. காலிலேயே மிதித்து.. அமுதாவுடன் சேர்ந்துதான் தண்ணி அடிப்பாராம் எஸ்எஸ்ஐ.. தூக்கிய போலீஸ்

மதுரையில் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற போலீஸ்காரர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

தேனி: கள்ளக்காதலியா அல்லது 2வது மனைவியா என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், எட்டி உதைத்தும், கொடூரமாக அடித்து தாக்கியுமே பெண் ஒருவரை கொலை செய்துள்ளார் போக்குவரத்து போலீஸ்காரர். தேனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்தவர் அமுதா.. 45 வயதாகிறது.. நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் அமுதாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.. அப்போது, படுக்கையறையில் அமுதா நிர்வாண நிலையில் விழுந்து கிடந்தார்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

அருகில் சென்று பார்த்தபோதுதான் அவர் இறந்துகிடப்பது தெரியவந்து அதிர்ந்து போனார்கள்.. உடனடியாக இதுகுறித்து உத்தமபாளையம் போலீசாருக்கும் தகவல் தந்துள்ளனர்.. போலீசாரும் விரைந்து வந்து, விசாரணையை துவங்கினர்.. அமுதாவின் உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன... இதனால் அவரை யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பிய நிலையில், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். பிறகு, அமுதாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 கிடுக்கிப்பிடி

கிடுக்கிப்பிடி

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தினர். அப்போதுதான், ஜெயக்குமார் என்ற போலீஸ்காரரின் பெயர் அடிபட்டது.. கம்பம் போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார் இந்த ஜெயக்குமார்,.. இதையடுத்து, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மொத்த விஷயத்தையும் சொல்லிவிட்டார். ஜெயக்குமார் போலீசில் தந்த வாக்குமூலத்தில் மேலும் பல்வேறு தகவல்களையும் தந்தார்.. ஜெயக்குமாருக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம். மனைவி, 2 மகன்கள் இருக்கிறார்கள்.

 ஹைடென்ஷன்

ஹைடென்ஷன்

அமுதாவுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாம்.. 26 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.. ஆனால், கணவரை பிரிந்து அமுதா வாழ்ந்து வந்துள்ளார்.. இந்நிலையில்தான், அமுதா, ஜெயக்குமார் இடையே பழக்கம் ஏற்பட்டு, அதுவே கள்ளக்காதலாக மாறி உள்ளது.. இருவரும் கணவன், மனைவிபோல 10 வருடத்துக்கும் மேலாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. எனினும் அடிக்கடி அமுதாவிடம் சண்டை போட்டு வந்திருக்கிறார்.. அதன்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயக்குமார், அமுதாவிடம் சண்டையிட்டு அவரை கடுமையாக அடித்து உதைத்துள்ளார்.. இந்த விவகாரம் கம்பம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது..

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

அதன்பேரில் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்காலிக சஸ்பெண்ட்டும் செய்திருக்கிறார்கள்.. ஆனால், அந்த வழக்கை அமுதா திரும்ப பெற்றுவிட்டதால், மறுபடியும் டியூட்டியில் சேர்ந்துள்ளார் ஜெயக்குமார்.. மறுபடியும் கம்பம் போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.. மறுபடியும் இந்த ஜோடி ஒன்றாகவே சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.. மறுபடியும் இவர்களுக்குள் 2 நாட்களுக்கு முன்பு தகராறு வந்துவிட்டது.. உச்சக்கட்ட ஆத்திரமடைந்த ஜெயக்குமார், அமுதாவை அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு, கழுத்தையும் நெரித்து கொன்றுள்ளார்.. கொலையை செய்துவிட்டு, உடனடியாக உத்தமபாளையத்திற்கு சென்று விட்டார்...

 அமுதா வீடு

அமுதா வீடு

ஜெயக்குமாரின் முதல் மனைவியும், 2 மகன்களும் உத்தமபாளையத்தில்தான் இருக்கிறார்களாம்.. அமுதாவுடன் கடந்த சில வருடங்களாகவே, கம்பம்மெட்டு காலனி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் ஜெயக்குமார்.. இவர்கள் 2 பேருமே, இரவு நேரங்களில் ஒன்றாகத்தான் உட்கார்ந்து தண்ணி அடிப்பார்களாம். சம்பவத்தன்றும் ஜெயக்குமார் - அமுதா இருவருமே மது அருந்திய நிலையில் வாக்குவாதம் வெடித்துள்ளது.. அப்போதுதான் காலிலேயே, அமுதாவின் கழுத்தை மிதித்தே கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. இதன் விசாரணைக்காக, அமுதா வீட்டிற்கு ஜெயக்குமாரை வரவழைத்திருக்கிறார்கள் போலீசார்.. விசாரணைக்கு பிறகு, அமுதா வீட்டில் வைத்தே போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+