Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட கேவலமே.. ஓசி பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு தேனி நபர் பண்ண வேலை! சிசிடிவியால் சிக்கிய புலி கட்சி புள்ளி

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக தனது மார்பில் இருந்து முடியை பறித்து உணவில் போட்டு, உணவில் முடி இருந்ததாக நாடகமாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல் நாள் ஓசி குழம்பு கேட்டு, ஹோட்டல் உரிமையாளர் கொடுக்காத நிலையில் அவரைப் பழி வாங்குவதற்காக மறுநாள் "முடி"நாடகம் நடத்தியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரத்தில் உள்ள சரவணன் என்பவர் நடத்தி வரும் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு இரண்டு பேர் சாப்பிட சென்றுள்ளனர். பரோட்டா வாங்கி சாப்பிட்ட அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் பரோட்டாவில் முடி இருப்பதாக உணவக உரிமையாளரிடம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

theni cctv crime

அதற்கு உணவக உரிமையாளர் சரவணன் இலையுடன் அதனை எடுத்துவிட்டு புதிதாக வேறு பரோட்டா தருகிறேன் என கூறியதோடு, இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆனால் சாப்பாட்டில் இப்படித்தான் முடி இருக்குமா? பூச்சி,பல்லி போன்ற எது விழுந்தாலும் இப்படித்தான் பதில் கூறுவீர்களா? இதுகுறித்த வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்து உங்கள் கடைக்கு சீல் வைக்காமல் விடமாட்டோம் என மிரட்டி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சென்ற பின்னர் உணவக உரிமையாளர் சரவணன், தனது உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, அதில் சாப்பிட வந்த இரண்டு பேரில் ஒருவர் தனது மார்பில் இருந்த முடியை கையால் இழுத்து அந்த முடியை பரோட்டாவில் போட்டது தெரியவந்தது. இதனால் உணவக உரிமையாளர் சரவணன் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக தேனி மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பொன்முருகனுடன் ஆலோசனை செய்த உணவக உரிமையாளர் முருகன், ஏராளமான ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தினருடன் இணைந்து வந்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அல்லிநகரம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பரோட்டாவில் முடியை போட்ட நபர் அல்லிநகரத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலிகள் கட்சி பிரமுகர் நித்தியானந்தம் என்பதை கண்டறிந்தனர். இது தொடர்பாக நித்தியானந்தத்தை கைது செய்த அல்லிநகரம் போலீசார் அவரிடம் நடத்தினர்.


விசாரணையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு நித்தியானந்தம் அதே உணவகத்திற்கு சென்று உணவக உரிமையாளர் சரவணனிடம் ஓசியாக குழம்பு கேட்ட நிலையில், அவர் தர மறுத்ததால் அவரை பழி வாங்குவதற்காக உணவில் முடியை போட்டு நாடகம் ஆடியதாக ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் கூறும் போது, தேனி மாவட்டத்தில் போலி வழக்கறிஞர்கள், போலி நிருபர்கள், மற்றும் லெட்டர் பேடு கட்சி பிரமுகர்கள் இதுபோல உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக உணவில் பான்பராக், குட்கா போன்ற பொருட்களை வைப்பது, உணவில் முடி, பூச்சி, பல்லி இருப்பதாக நாடகமாடுவது போன்ற கீழ்த்தனமான செயல்களில் ஈடுபட்டு உணவகங்களின் பெயரை கெடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற நபர்கள் மீது உணவ உரிமையாளர்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஓசி குழம்பு கேட்டு கொடுக்காததாலும்,சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காகவும் தமிழ் புலிகள் கட்சி பிரமுகர் உணவில் முடியை போட்டு நாடகமாடிய சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+