• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்.. ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!

|
  தேனியில் பயங்கரம்.. திருமணமான பெண்ணை சீரழித்த 12 பேர்-வீடியோ

  தேனி: வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி திருமணமான பெண்ணை சீரழித்த கயவன் அதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளான். 12 பேர் தொடர்ந்து அந்த பெண்ணின் வாழ்க்கையை சூறையாடியுள்ளனர். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள்ளாக துணை முதல்வரின் சொந்த தொகுதியான தேனியில் இந்த படுபயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 10 பேரை தேடி வருகின்றனர்.

  பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர் அதே ஊரைச் சேர்ந்த வசந்தகுமார் என்பருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

  காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை ஆசையால் விஜயலட்சுமி மூன்றாவது முறையாக கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது கர்ப்பம் கலைந்தது. மருத்துவ செலவிற்கு வட்டிக்கு கடன் வாங்கினார்.

  ஸ்டெர்லைட் ஆலை வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை.. விலகிய உயர்நீதிமன்ற நீதிபதி

  நெருக்கிய கடன்

  நெருக்கிய கடன்

  கடன் தொல்லையால் கேரள மாநிலம் கொல்லத்திற்கு எலக்ட்ரீஷியன் வேலைக்கு வசந்த குமார் சென்றார். சங்கராபுரம் தனியார் வங்கி அருகே உள்ள வீட்டில் தனியாக குழந்தைகளுடன் விஜயலட்சுமி தங்கியிருந்தார்.

  வீட்டு செலவுக்கு கணவர் அனுப்பும் பணத்தைப் பெற அருகிலுள்ள தனியார் வங்கிக் கிளையில், விஜயலட்சுமி சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

  ஆசைகாட்டி மோசம்

  ஆசைகாட்டி மோசம்

  விஜயலட்சுமியின் தனிமையான நிலையை அறிந்த சிவகார்த்திகேயன் என்ற ஊழியர் அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

  இதை நம்பிய விஜயலட்சுமியை, மேலதிகாரியை சந்திக்க வேண்டும் என கூறி கம்பத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

  வீடியோ எடுத்து மிரட்டல்

  வீடியோ எடுத்து மிரட்டல்

  அந்த வீடியோ பதிவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியே பலமுறை உறவு கொண்டார். தன்னுடன் அதே வங்கியில் பணிபுரியும் தன் நண்பர்களுக்கும் உடன்பட வேண்டும் என்று வற்புறுத்தினார். இதற்கு உடன்பட விஜயலட்சுமி மறுக்கவே, உனது கணவனுக்கு வீடியோவை அனுப்புவேன் என மிரட்டினார். இதையடுத்து பலர் தொடர்ந்து பலாத்காரம் செய்து சீரழித்தனர்.

  சீரழித்த உறவினர்

  சீரழித்த உறவினர்

  அதைத்தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து தனது உறவினரான போஸ் என்பவரின் மகன் ஈஸ்வரன் என்பவரிடம் நடந்த சம்பவங்களைக் கூறி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டு வந்த விஜயலட்சுமியை அவரும் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பல முறை மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கினார்.

  கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

  மனைவியை கவனித்த கணவர்

  மனைவியை கவனித்த கணவர்

  இந்நிலையில் மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த கணவர் மனைவியின் போனுக்கு வரும் அழைப்புகளை ஆராய்ந்துள்ளார். பல்வேறு நபர்களிடமிருந்து இரவு 11 மணிக்கு மேல் அழைப்பு வருவதை அறிந்தார்.

  போலீசில் புகார்

  போலீசில் புகார்

  இந்தநிலையில் மனைவியின் உடல் நிலை மோசம் அடைந்ததால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

  கணவரின் அன்பில் நெகிழ்ந்த போன மனைவி நடந்த விபரங்களை அழுதுகொண்டே கூறினார். அதிர்ந்த கணவன் கடந்த 2018 டிசம்பரில் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். எந்த வித விசாரணையுமின்றி தம்பதியினர் அலைக்கழிக்கப்பட்டனர். வாழ்க்கை பாழாகி விடும்' என்று விசாரணை அதிகாரிகள் மிரட்டினர்.

  ஆதரங்கள் சேகரிப்பு

  ஆதரங்கள் சேகரிப்பு

  சங்கராபுரத்தை விட்டு தேவாரம் போலீஸ் குடியிருப்பு அருகே தம்பதியர் குடியேறினார்கள்.

  மன அமைதியின்றி தவித்த கணவன், தங்கள் நிலைக்கு காரணமானவர்களை ஆதாரத்துடன் பிடிக்க வேண்டுமென்று முடிவு செய்தார். தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் விபரம் முழுவதையும் சேகரித்தார். திரட்டிய ஆதாரங்களுடன் ஜூன் 8 ஆம் தேதி எஸ்.பி., அலுவலகத்திற்கு மனைவியுடன் சென்று புகார் அளித்தார். அங்கிருந்து போடி தாலுகா ஸ்டேனுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

  கண்ணீர் கதறல்

  கண்ணீர் கதறல்

  மேலும் பலாத்காரம் செய்த வீடியோவை பரப்புவோம் என்று மிரட்டியே 12 பேர் என்னை சீரழித்தனர். இதனால் என் உடல் நலம் பாதிக்கப்பட்டதுடன் மனநலமும் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்றார்.

  காம கொடூரர்கள் சிக்குவார்களா

  காம கொடூரர்கள் சிக்குவார்களா

  இந்நிலையில் நேற்று தனியார் வங்கி துணை மேலாளரான போடியைச் சேர்ந்த முத்துசிவகார்த்திக் 30, சிலமலையை சேர்ந்த ஈஸ்வரன் 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சதீஸ்,பாண்டி, ராஜபார்த்திபன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இளம்பெண்ணை 12-க்கும் மேற்பட்ட காமக்கொடூரர்கள் பாலியல் பலாத்கார சித்ரவதைக்கு ஆளாக்கிய சம்பவம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொந்தத்தொகுதியில் ஏற்பட்டுள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் தேனியில் நடந்த பலாத்கார சம்பவம் பரபரப்பு தீயை பற்றவைத்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  2 men have been arrested after authorities concluded that a girl had been sexually abused repeatedly over several months at Sankarapuram, Theni District.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more