தேனி அரசு ஊழியர்களின் கழுத்தில் அதென்ன கருப்பா தொங்குது? பழைய பென்ஷன் திட்டம் வந்துருமா? புது அதிரடி
தேனி: 15 ஆண்டுகள் முடிந்த அடுத்த மாதத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் முழு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையிலும், 80 வயது நிறைந்தவர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையிலும், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்கும் வகையிலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தேனி ஊழியர்கள் முன்னெடுத்துள்ள இந்த அதிரடி, பலரது கவனத்தை பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முழு ஓய்வூதியத் தொகையில் 33 விழுக்காட்டிற்கு மிகாமல் அரசுக்கு ஒப்படைப்பு செய்து அதற்கான மொத்தத் தொகையினை பெற்றுக் கொள்வது வழக்கம்.

இதற்குப் பதிலாக, முழு ஓய்வூதியத் தொகையில் 33 விழுக்காடு குறைக்கப்படும். இதனை குறை ஓய்வூதியம் என்று கூறுவர். இந்த குறை ஓய்வூதியம் 15 ஆண்டுகள் வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்கு பிறகு முழு ஓய்வூதியம் வழங்கப்படும்.
20 விழுக்காடு ஓய்வூதியம்
எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, 15 ஆண்டுகள் முடிந்த அடுத்த மாதத்திலிருந்து ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் முழு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வகையிலும், 80 வயது நிறைந்தவர்களுக்கு 20 விழுக்காடு ஓய்வூதியம் தானாக சென்றடையும் வண்ணமும், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு அட்டை கிடைக்கும் வகையிலும் உடனடி நடவடிக்கையினை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதிலும் திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
இதேபோல, எதிர்க்கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, திமுக அரசை கேள்வி எழுப்பி வருகின்றன.. "திமுக தனது தேர்தல் அறிக்கை எண் 308-ல், "மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70 வயது நிறையும்பொழுது 10 சதவிகிதமும், 80 வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டு இருக்கிறது.
திமுக அரசால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.. ஆனால், 80-வயது நிறைவற்ற ஓய்வூதியதாரர்களுக்கே 20 விழுக்காடு உயர்த்தி வழங்குவதில் மாதக் கணக்கில் தாமதம் ஏற்படும் அவல நிலை நிலவுவதாக தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்து வருகிறது.
கழுத்தில் தொங்கிய கோரிக்கை
இந்நிலையில், தங்களது கோரிக்கை அட்டையை அணிந்து கொண்டு, தேனியில் அரசு ஊழியர்கள் பணி செய்தது, அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. சி.பி.எஸ்.,(பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கம் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிவதாக அறிவிக்கப்பட்டது.
தேனி அரசு ஊழியர்கள் அதிரடி
அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுப்பணித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவருமே, கருப்பு பட்டை அணிந்துக்கொண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.. அந்த கருப்பு பட்டை கோரிக்கையை அணிந்தபடியே நாள் முழுவதும் பணியிலும் ஈடுபட்டனர்..
பிறகு, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக், வீரபாண்டியில் உள்ள நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விளக்க கூட்டத்தில் சங்கத்தினரிடம் கோரிக்கைகள் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.. இதுநாள்வரை கோரிக்கைகளை விடுத்துவந்த நிலையில், அந்த கோரிக்கை அட்டை அணிந்து கொண்டே பணியில் ஈடுபட்டது, மாவட்ட மக்களின் கவனத்தை திருப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications