Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடாத காவல்துறை.. நெல்லையில் சீட் பெல்ட் போடாத அரசு பஸ் டிரைவர்களை மடக்கி ஃபைன் போட்ட போலீசார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று கூறி அரசு பேருந்து ஓட்டுனர்கள் 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகப்பாண்டி, பஸ்சில் டிக்கெட் எடுக்க மாட்டேன் என்று கூறும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. "தானும் ஒரு அரசு ஊழியர் தான். டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.

Amid the ongoing conflict between Police and Tnstc Crackdown On Govt bus drivers violations

இதையடுத்து, போக்குவரத்து துறையில் இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், 'அரசுப் பேருந்துகளில், காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க அனுமதி கிடையாது. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். மற்ற அனைத்து நேரத்திலும் போலீசார் டிக்கெட் எடுத்துதான் பயணிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்து இருந்தது.

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் காவலர் பயணித்தது சர்ச்சையான நிலையில், தற்போது நோ பார்க்கிங், அதிக பயணிகளை ஏற்றியது என அரசு பேருந்து டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தான் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று கூறி அரசு பேருந்து ஓட்டுனர்கள் 3 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெள்ளத்துரை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தை மறித்த அவர் சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி ரூ.500 அபராதம் விதித்தார். இதேபோல் மேலும் 2 அரசு பேருந்து டிரைவர்களிடம் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை ஒழுங்காக அணியவில்லை என்று கூறி தலா ரூ.500 அபராதம் விதித்துள்ளார்.

முன்னதாக நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அரசு பேருந்து டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றார்கள். நேற்று சென்னை தாம்பரத்தில் அரசு பேருந்து டிரைவருக்கு போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Amid the ongoing conflict between Police and Tnstc Crackdown On Govt bus drivers violations

இதேபோல், நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் விதி மீறலில் ஈடுபட்ட அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதிக பயணிகளை ஏற்றி வரும் பேருந்துகளுக்கும் சில இடங்களில் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு அரசு பேருந்துக்கு பார்க்கிங் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமின்றி ஓட்டுநர், நடத்துநர் சீருடை முறையாக அணிந்துள்ளனரா? என்று சோதனை செய்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சொலப்பட்டாலும், இத்தனை நாட்கள் இன்றி திடீரென்று இப்படி, போலீசார் கெடுபிடி காட்டுவது குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+