திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லிக்கு பறந்த "ஸ்டேட்மென்ட்".. மறுநாளே குறி வைத்த ஸ்டாலின்! இன்னைக்கு இருக்கு "கச்சேரி".. பின்னணி

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: முதல்வர் ஸ்டாலினின் நெல்லை பயணம் திமுகவினர் இடையே அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் இந்த நெல்லை பயணத்தை மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று தொடங்கியது. 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது.

இந்த யாத்திரை மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியை மீட்டு எடுக்கும், மீண்டும் தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சியை கவனம் பெற வைக்கும் யாத்திரையாக இது பார்க்கப்படுகிறது.

நல்லரசு செய்த அரசனை 'வஞ்சகத்தால்' வீழ்த்தினாலும் மக்களிடம் புகழ் மறையாது.. ஸ்டாலின் ஓணம் வாழ்த்துநல்லரசு செய்த அரசனை 'வஞ்சகத்தால்' வீழ்த்தினாலும் மக்களிடம் புகழ் மறையாது.. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

ஸ்டாலின்

ஸ்டாலின்

இந்த பயணத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்திக்கு தேசிய கொடியை கொடுத்து பயணத்தை தொடங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சி இந்த பயணத்தை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறது. தேசிய அளவில் இந்த பயணம் அதிகம் கவனம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த பயணத்தை தொடங்கி வைத்தது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நேற்று இந்த நிகழ்வில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் மிகவும் நெருக்கமாக காணப்பட்டார்.

 நெருக்கம்

நெருக்கம்

ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினை கட்டி அணைந்து வரவேற்பு கொடுத்தார். அதேபோல் இரண்டு பேரும் கைகோர்த்துக்கொண்டு நடந்து சென்றனர். முன்பை விட இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக, நட்பாக இருந்தனர். காங்கிரஸ் - திமுக இடையிலான நெருக்கத்தை காட்டும் விதமாக இந்த நிகழ்வு இருந்தது. அதோடு காங்கிரசுடன் கூட்டணி தொடரும் என்று டெல்லிக்கு ஸ்டாலின் அனுப்பிய "ஸ்டேட்மெண்டாகவும்" இது பார்க்கப்படுகிறது.

நட்பு

நட்பு

நேற்று இந்த நிகழ்வு முடிந்ததும் மாலைக்கு பின்பாக திருநெல்வேலிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். இன்று இரவு திருநெல்வேலியில் திமுக நிர்வாகிகளுடன் சின் ஆலோசனை செய்தார். இன்றுஅங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ரூ. 330 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதன் பின் திருநெல்வேலியில் திமுக நிர்வாகிகளுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார்.

ஸ்டாலின் நம்பிக்கை

ஸ்டாலின் நம்பிக்கை

இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக தென் தமிழ்நாட்டிற்கு செல்லவே இல்லை. கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்திய அளவிற்கு அவர் தென் மண்டலத்தில் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில்தான் இன்று முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் பல்வேறு சந்திப்புகளை நடத்த உள்ளார். தென் மண்டலத்தில் சில மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் இடையே உரசல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய உட்கட்சி

புதிய உட்கட்சி

இங்கு பல புதிய உட்கட்சி மோதல்கள் உருவெடுத்து உள்ளன. அதேபோல் உட்கட்சி தேர்தல் காரணமாக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் , மாவட்ட மறுசீரமைப்பு விரைவில் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சில உட்கட்சி மோதல்கள் அங்கே நிலவி வருகின்றன. இதை சரி செய்யும் விதமாகவே முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின் மதுரைக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின் இடையில் விருதுநகரில் திமுக நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அங்கேயே மதிய உணவும் சாப்பிட உள்ளார்.

English summary
Are these reasons behind CM Stalin's sudden Thirunelveli trip and what is the plan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X