கூகுள் பே இருக்கா? இப்படி செய்தால் மொத்த பணமும் "யுபிஐ" செயலியில் நழுவி போயிருமாம்.. உஷார் மக்களே
நெல்லை: பாளையங்கோட்டையில் நடந்த மோசடி சம்பவத்தின்கீழ் 2 பேர் கைதாகி உள்ளனர்.. என்ன நடந்தது?
கூகுள் பே-வில் நாளுக்கு நாள் புதுவிதமான மோசடிகள் நடந்தவாறே உள்ளது.. இப்போதெல்லாம் டீக்கடைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை, ஆன்லைன் வர்த்தக பரிவர்த்தனைகள் எனப்படும் கூகுள் பே ஆப் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அதனால்தான், நூதன முறையில் மோசடிகளும் மலிந்துவிட்டன.

குறிப்பாக, கூகுள் பே செயலியின் மூலம் ஒருவரது எண்ணுக்கு அல்லது UPI ID-க்கு வேண்டுமென்றே தவறுதலாக பணத்தை அனுப்பும் மோசடி நபர், தாம் தவறுதாக பணம் அனுப்பிவிட்டதாகக் சொல்லி மறுபடியும் மீண்டும் அந்த பணத்தை அவரது எண்ணுக்கு திருப்பி அனுப்புமாறு சொல்கிறாராம்.. அப்படி பணத்தை நாம் திருப்பி அனுப்பும்பட்சத்தில், நம்முடைய வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
வார்னிங்: எனவே, தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக யாராவது போனில் தொடர்புகொண்டால், உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக பெற்றுக்கொள்ளுமாறு கூற வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
UPI பரிவர்த்தனைகள் செய்பவர்கள், யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பிறகே அனுப்ப வேண்டும்.. பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது
ஆப்ஷன்கள்: அதேபோல, UPI பின்னை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.. யாரிடமும் அந்த நம்பரை சொல்லக்கூடாது.. UPIல் முக்கிய ஆப்ஷனாக உள்ள QR ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்... பணத்தை பெறுவதற்கு QR ஸ்கேன் செய்ய தேவையில்லை.. ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு நம்முடைய போனுக்கு எதாவது மெசேஜ் வந்தால் அதனை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் போலீசார் அறிவுறுத்தி கொண்டேயிருக்கிறார்கள்.
அப்போதுகூட, கூகுளி பே செலுத்துவதில் மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. நெல்லை பாளையங்கோட்டை, சீவலப்பேரி ரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டேனியல் சுந்தர் என்ற 35 வயது நபர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.
கம்பிகள்: சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு, சுண்டக்குறிச்சி மேல தெருவை சேர்ந்த முருகன் என்பவர் போன் செய்துள்ளார்.. தன்னுடைய வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை கொண்டுவந்து இறக்குமாறு சொல்லியிருக்கிறார்..
உடனே டேனியல் சுந்தர், முருகனுடைய வீட்டில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளை இறக்கி விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது முருகன் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பணத்தை கூகுல்-பே மூலம் அனுப்பிவிட்டதாக சொல்லி உள்ளார்.
புகார்கள்: இதுகுறித்து டேனியல் சுந்தர், நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் எதுவும் நிறுவனத்திற்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.. இதனையடுத்து டேனியல் சுந்தர், தேவர்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சென்னை, கொராட்டூரை சேர்ந்த விக்னேஷ் (30), திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பைசூர் ரகுமான் (34) ஆகிய 2 பேரும் டேனியல் சுந்தரிடம், முருகன் போலவே பேசி, கட்டுமான பொருட்களை வாங்கியதும், முருகனிடம், டேனியல் சுந்தர் பேசுவதாக கூறி பொருட்களுக்குரிய பணத்தை கூகுள்-பே மூலம் பெற்றுக் கொண்டதும் தெரிய வந்தது.
அதிர்ச்சி: இதைத்தொடர்ந்து விக்னேஷ், பைசூர் ரகுமான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கூகுள் பே மூலம் புதுபுது வகையில் மோசடிகள் நடந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications