சொந்த ஊர் போன சென்னை ஐடி ஊழியருக்கு வந்த விபரீத ஆசை.. தனியாக காட்டுக்குள் சென்றவருக்கு நேர்ந்த கதி!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சொந்த ஊருக்கு சென்ற சென்னை ஐடி ஊழியரை ஓரினசேர்க்கைக்காக தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்த இளைஞர்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று தென்காசியில் 10 ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளைஞர், கிரிண்டர் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கை செயலியை பயன்படுத்தி வந்தார். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் களக்காடு ஆகும். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சொந்த ஊர் வந்திருந்த ஐடி நிறுவன வாலிபருக்கு, கிரிண்ட ஆப் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சுடலை என்ற சுரேஷ் (வயது 20) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்தது.

Nellai Tenkasi crime

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம்பறிப்பு

அப்போது சுடலை, ஐடி நிறுவன வாலிபரை ஓரினசேர்க்கைக்காக களக்காடு அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்தார். அதன்பேரில் அந்த இளைஞரும் அங்கு சென்றார். அப்போது, சுடலையுடன் அவரது கூட்டாளிகள், மணிகண்டன், இசக்கிப்பாண்டி, சுரேஷ் மற்றும் 17 வயது சிறுவன் என் 5 பேர் நின்றுகொண்டிருந்தனர். ஐடி நிறுவன வாலிபரிடம் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பணம் தரவில்லை என்றால் அரிவாளால் வெட்டிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அந்த இளைஞர் தன் அக்கவுண்டில் இருந்து ரூ.11,000 கூகுள் பேவில் அனுப்பினார். மேலும் இதுபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஐடி நிறுவன ஊழியர் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென்காசியில் பள்ளி ஆசிரியர் கைது

இதேபோன்று தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். புளியங்குடி அருகே உள்ள தனியார் பள்ளியில் பிரான்சிஸ் (வயது 35) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியதால் அதற்காக காலையும் மாலையும் சிறப்பு வகுப்புகள் நடந்து வருகிறது. அப்படி சிறப்பு வகுப்பின் போது 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த ஆசிரியரை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+