நெல்லை.. மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிப்பு.. தெருவிற்கு சீல்
நெல்லை: நெல்லையில் மீண்டும் கொரோனா வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டையில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தெருப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதி சீல் பூட்டப்பட்டது.
Recommended Video
வேகம் எடுக்கும் கொரோனாவால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை தற்போது வேகமாக பரவிவருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் ந்தேதி முதல் கொரோனா தாக்கம் பரவத் தொடங்கி தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 7 மாதத்திற்கு பின் சற்று நோயின் தாக்கம் குறையத் தொடங்கியது.

வணிக நிறுவனங்கள்
இந்த நிலையில் ஊரடங்கில் மாதந்தோறும் தளர்வுகள் செய்யப்பட்டு பொதுபோக்குவரத்து , வணிக நிறுவனங்கள் , பள்ளிகள் தொடங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வந்தது. தற்போது மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம்
கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று நன்கு குறைந்து நாள் ஒன்றுக்கு 300 பேர் என்ற நிலைதான் இருந்தது. நெல்லை மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. ஆனால் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழக அளவில் ஆயிரத்தை தாண்டுகிறது. நெல்லை மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 20க்கு மேல் உயர்ந்து வந்தது.

பாளையங்கோட்டை
இந்நிலையில் பாளையங்கோட்டை முனையாடுவார் நாயனார் தெருவில் சென்னையில் இருந்து வந்த மீன் வியாபரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் வசிக்கும் தெருப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த தெருப்பகுதி சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

மீண்டும் பரவல்
மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியுள்ளது நெல்லை மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று நெல்லை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications