"அப்பாவு கிட்டயே கேட்டேனே.. அவரே ஷாக் ஆகுறாரு".. ராதாபுரம் பெண் கிளப்பிய பகீர்.. இதெல்லாம் உண்மையா?

10 கல்குவாரிகள் குறித்து, சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்கவில்லை என ஒரு பெண் குற்றஞ்சாட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: சபாநாயகர் அப்பாவு தொகுதியில், நின்றுகொண்டு, ஒரு பெண் வீடியோ வெளியிட்டு, திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார்.. ஆனால், இதுகுறித்த உண்மைத்தன்மை எதுவும் உடனடியாக தெரியாவிட்டாலும், பாஜக தரப்பில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்களாம்.
சில மாதங்களுக்கு முன்பு, நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டது.

உடைத்து வைத்திருந்த கற்களை லாரிகள் மூலம் எம் சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு எடுத்துச்செல்லும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

ராட்சச பாறைகள்

ராட்சச பாறைகள்

அப்போது நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக ராட்சச பாறை சரிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கி விட்டார்கள்.. இதுகுறித்து தகவலறிந்த முன்னீர்பள்ளம் போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், 300 அடி பள்ளத்தில் 3 ஜேசிபி இயந்திரம், 2 லாரிகளும் சிக்கிவிட்டன.. ராட்சச பாறை விழுந்த இடத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட்டாலும், செல்வன் என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்தது.

விடமாட்டேன்

விடமாட்டேன்

முழுமையான அனுமதியின்றி குவாரி பணிகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கை பதிவு செய்தனர்.. அப்போது, இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "5 வருடங்களுக்கு குவாரி செயல்பட 2018-ம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. எனினும், கல் குவாரி விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி தந்திருந்தார்.. அதோடு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியதுடன், கவலைப்படாதீங்க. சீக்கிரமா குணம் அடைவீர்கள்" என்றும் நம்பிக்கை தந்திருந்தார்.

அப்பாவு ஷாக்

அப்பாவு ஷாக்

இந்நிலையில்தான், ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது இருக்கன்துறை என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் நின்றுகொண்டு, ஒரு பெண் அந்த வீடியோவில் பேசுகிறார்.. "இருக்கன்துறை கிராமத்தில் தருமபுரம் ஆதீன மடத்திற்குச் சொந்தமாக 2000 ஏக்கர் நிலங்கள் இருக்கிறது.. இங்கு ஆதீன மடத்திற்கே தெரியாமல் 19 கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது திமுக அரசு... இதுகுறித்து சபாநாயகர் தொகுதி என்ற முறையில் அப்பாவுவை சந்தித்து நான் கேட்டேன். ஆனால் அவரோ, "என்னது என் தொகுதியில் கல்குவாரி நடக்கிறதா?" என தெரியாதது போல் கேட்டது அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அளிக்கிறது...

அப்பாவுவா

அப்பாவுவா

விவசாயம் சூழ்ந்த பகுதியான இங்கு எப்படி அனுமதி கொடுக்கமுடியும்? தமிழகத்தில் தான் வாழ்கிறோமா என்றும் சந்தேகம் கிளம்புகிறது.. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு என்று சொல்லி அரசின் அனுமதியை எடுத்துவிட்டு கனிமவளங்கள் கேரளத்திற்கு கடத்தப்பட்டு வருகின்றது என்பது உட்பட வீடியோவில் அந்த பெண் பேசியதாக தெரிகிறது.. அதேசமயம், அந்த பெண் யார் என்று தெரியவில்லை. அவர் சொல்வதும் உண்மையான தகவல்தானா? என்றும் தெரியவில்லை.. அப்பாவுவை நிஜமாகவே சந்தித்து பேசினாரா? அல்லது அப்பாவு மீதும், திமுக அரசு மீதும் பொய்யான குற்றச்சாட்டை வீசுகிறாரா? என்றும் உறுதியாக தெரியவில்லை.. ஆனால், அந்த வீடியோவை பாஜகவினர் அதிகளவில் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+