சாதி மறுப்பு திருமணம்..கம்யூனிஸ்ட் ஆபிஸில் அட்டாக்! கம்பிக்கிடையே பந்தல் ராஜா.. எடப்பாடி செம கோபம்.!
நெல்லை: நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூரையாடப்பட்ட விவகாரத்தில், 9 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருநெல்வேலி பெருமாள் புரத்தை சார்ந்த உதய தாட்சாயினி (23) என்ற பெண்ணுக்கும் பாளையங்கோட்டை அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த மதன் (28) என்ற நபருக்கும் நேற்று பாளையங்கோட்டையில் கலப்பு திருமணம் நடைபெற்றது.

இதற்கு இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் பெண் வீட்டார் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்
இதற்கிடையே நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதுமண தம்பதிகள் இருப்பதாக பெண்ணின் வீட்டிற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்களுடன் கடும் வாக்குவாதம் இதில் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்திய மார்க்சிசஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள தீக்கதிர் பேப்பர் அலுவலகத்தையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூரையாடப்பட்ட விவகாரத்தில், 9 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக தமிழக எதிர்க் கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த விடியா திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு அத்தாட்சி.
சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் ஜாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
இதனிடையே பந்தல் ராஜா கைது செய்யப்பட்டுள்ளதால் நெல்லையில் பதற்றம் நீடிக்கிறது. தற்போது கைதாகி இருக்கும் பந்தல் ராஜா நெல்லையில் வெள்ளாளர் சமுதாய மக்கள் மத்தியில் பிரபலமாக வளர்ந்து வரும் நபர் ஆவார். வெள்ளாளர் மக்களுக்கு பிரச்சினை என்றால் உடனடியாக போராட்டம், ஆர்ப்பாட்டம், போஸ்டர்கள் என இறங்கி அடிக்கக் கூறியவர். இவருக்கென குறிப்பிட்ட ஆதரவாளர்கள் கூட்டமும் இருக்கிறது. அதே நேரத்தில் கட்சியின் பெயரைக் கூறி இது போன்ற காதல் விவகாரங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உள்ளது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications