திருநெல்வேலியில் ஆசைத்தம்பிக்கு வில்லங்கமான ஆசை.. காய்கறி கடையில் கையும் களவுமாகி சிக்கி.. அசிங்கம்
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வான்துலுக்கப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த ஆசைதம்பி என்பவர் தனது வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து உள்ளார். அதில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த அவர், அதனை வைத்து காய்கறி கடையில் பொருள் வாங்கியுள்ளார். கடைக்காரர் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்ததால் கையும் களவுமாக சிக்கியுள்ளார். 6 மாதங்களாக வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்து வந்தது தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வான்துலுக்கப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்த 59 வயதாகும் ஆசைதம்பி என்பவருக்கு வில்லங்கமான ஆசை பிறந்துள்ளது. அந்த ஆசையை நிறைவேற்ற வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து உள்ளார். அதில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தாராம்.
தொடர்ந்து ஆசைதம்பி கடந்த டிசம்பர் 15ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பாபநாசம் மெயின் ரோட்டில் மருதம்நகரில் உள்ள காய்கறி கடை ஒன்றில் பொருட்கள் வாங்கியிருக்கிறார். அதற்கு கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த ரூ.100 கள்ளநோட்டை கடைக்காரரிடம் கொடுத்திருக்கிறார். அதை வாங்கி பார்த்த கடைக்காரர் முகமது சபீருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து கேட்ட போது ஆசைதம்பி பேச்சு வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வைத்து விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் உடனடியாக பாபநாசம் மெயின் ரோட்டில் மருதம்நகரில் உள்ள காய்கறி கடைக்கு சென்றனர். அவரிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்தனா். அவர் வைத்திருந்த சுமார் 25 எண்ணம் கொண்ட 100 ரூபாய் அனைத்தும் கலர் ஜெராக்சில் அச்சடித்த கள்ளநோட்டு என்பது அவர்களுக்கு தெரியவந்தது. மொத்தம் ரூ.2,500 மதிப்புக்கு அச்சடித்த கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஆசைதம்பி கள்ள ரூபாய் நோட்டுகளை பல்வேறு கடைகளில் கொடுத்து கடந்த 6 மாதங்களாக பொருட்கள் வாங்கி வந்ததும் போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து, ஆசைதம்பியை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த கலர் ஜெராக்ஸ் எந்திரமும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications