ராமதாஸ் கண்ணீரில் அரசியல் வலி.. உருகிய ஜான் பாண்டியன்.. விஜயுடன் தமமுக கூட்டணி? ஆஹா, என்ன நடக்குது
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் நான் அக்கட்சியின் இளைஞரணி தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளேன். அந்த வகையில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு நான் மிகவும் மன வருத்தமடைந்தேன். வன்னியர் சமூகத்திற்காக நீண்ட காலமாக போராடிய ஒரு போராளி கண்ணீர் விடுவது வருத்தத்திற்குரியது" என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன் கூறியிருக்கிறார்.
நாங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இதுவரை உள்ளோம், தங்களது கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான், ஆனாலும் , தேர்தல் அறிவித்த பிறகு, கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி, யாருடன் கூட்டணி என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்போம் என்று ஜான் பாண்டியன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணியில் இணையமாட்டோம்,. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தொடர்ந்து கூறி வருகிறார்..
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்
நடிகர் விஜய்க்கு கூட்டத்தை பார்ப்பதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவருக்குக் கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது. தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் அவற்றை நிறைவேற்றுவது கடினம். அவர் முதலில் தேர்தலை சந்திக்கட்டும், அப்புறம் பார்க்கலாம் என்றெல்லாம் விஜய்க்கு எதிராகவே பேசி வருகிறார்.
ஆனால் நேற்றைய தினம் 'விஜய் கட்சியுடன் கூட்டணியில் இணைவீர்களா' என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை' என பதிலளித்துள்ளார் ஜான் பாண்டியன்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சியின் நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் தற்போது நடைபெற்றுள்ளது..
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொண்டனர்.
நெல்லை ஜான் பாண்டியன்
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி அரசியல், சமூக பிரச்சனைகள், சிறார் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சியில் எடுக்கப்பட வேண்டிய அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை யார் அழைத்து உரிய அங்கீகாரம் அளித்து மரியாதை செய்கிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.
விஜய்யுடன் இணைவீர்களா
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இப்போதுதான், தான் நேரடியாக தேர்தல் களத்தில் இறங்க உள்ளார். அவர் களத்திற்கு வரட்டும், அதன் பிறகு அரசியல் பலம் எவ்வளவு என்பதைப் பார்ப்போம். தற்போது விஜய் கட்சிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவது மீடியாக்கள்தான்..
விஜய் கட்சியுடன் கூட்டணியில் இணைவீர்களா?' என்று கேட்கிறீர்கள்.. அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் முடிவுகள் எடுக்கப்படும்..
பாட்டாளி மக்கள் கட்சி - டாக்டர் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய ஆரம்ப காலத்தில் நான் அக்கட்சியின் இளைஞரணி தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளேன். அந்த வகையில், கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் விட்டதை கண்டு நான் மிகவும் மன வருத்தமடைந்தேன். வன்னியர் சமூகத்திற்காக நீண்ட காலமாக போராடிய ஒரு போராளி கண்ணீர் விடுவது வருத்தத்திற்குரியது
பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். கட்சியின் எதிர்காலத்திற்கும், சமூக நலனிற்கும் அது அவசியம். இருவரையும் இணைப்பது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இதற்காக இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன்..
குற்ற செயல்கள்
தமிழகத்தில் சிறார் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையை தருகிறது.. சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அதற்கு முதன்மை பொறுப்பு தாய், தந்தையருக்கே. அவர்களின் வளர்ப்பு சரியான முறையில் இல்லை என்பதே இதற்குக் காரணம். சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்...
குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோர்களையும் கைது செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி பொறுப்புணர்வுடன் செயல்படுவார்கள்..
தமிழக அரசின் பொங்கல் பரிசு
பொங்கல் பரிசாக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் மக்கள் வாழ்வாதாரம், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்" என்றார்.
ஜான் பாண்டியன் நடத்தியிருந்த இந்த செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications