ஆஹா செம! நெல்லை-எழும்பூர் வந்தே பாரத் ரயில் இனி இந்த ஸ்டேஷனிலும் நிற்கும்! வெளியான முக்கிய அறிவிப்பு
திருநெல்வேலி: சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்ற செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை எழுப்பியிருந்தனர். இந்நிலையில், ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் இந்தியன் ரயில்வே முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இந்தியன் ரயில்வேயில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்துக்கொண்டு புதுப்பொலிவுடன் இருந்து வருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கும் இந்தியன் ரயில்வே ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் ரயில் சேவையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ரயில்கள் முக்கிய நகரங்களை இணைக்கும். அதேபோல அதிவேகம் மற்றும் நவீன வசதிகளை கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் இந்த ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. முதன் முதலாக டெல்லியிலிருந்து 759 கி.மீ தொலைவில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு இயக்கப்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்த மாநிலங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டன. எடை குறைவான இந்த ரயில்கள் கவாச் ரயில் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டதால் அதன் மீதான வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்த ரயில்கள் அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் சேவையை நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் தொடங்கி வைத்து வருகிறார். தென் மாநிலங்களை பொறுத்த அளவில் சென்னை-மைசூர், சென்னை-மதுரை, சென்னை-கோவை மற்றும் திருவனந்தபுரம்-காசர்கோடு வழித்தடங்களில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரயில் சேவை கன்னியாகுமரி வரை நீடிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கையை எழுப்பியிருந்தார். மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்திருந்தார்.
அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மிக முக்கியமான நகரம் கோவில்பட்டி. மேலும், சிவகாசிக்கு அடுத்தபடியாக தீப்பெட்டி தொழிலில் சிறந்து விளங்குவது கோவில்பட்டி தான். மதுரை கோட்ட ரயில்வே வருவாயில் மூன்றாம் இடத்தில் பெரும் பங்கு வகிப்பது கோவில்பட்டி நகரம். இந்த சிறப்பு மிக்க கோவில்பட்டி நகரில் 'வந்தே பாரத்' ரயில் நின்று செல்ல ஆவணம் செய்யவேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். இது தென்மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்னதாக இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications