மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு வெளியேறிய தொழிலாளர்கள்.. 100 ஆண்டு பந்தம் முடிவுக்கு வந்தது
திருநெல்வேலி: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மாஞ்சோலை மலைகளில் இருந்து விடைபெற்றார்கள். ஏராளமானோர் ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில், மீதமுள்ள மக்களும் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகிறார்கள். மலைகளில் 100 ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வேலை செய்து வரும் அவர்கள், எஸ்டேட் நிலத்தில் தனியார் நிறுவனத்தின் 99 ஆண்டு குத்தகை காலம் விரைவில் முடிவடைவதால், சமவெளிகளுக்கு செல்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு 2,000-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்தார்கள். இறுதியாக சுமார் 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்கள். மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு என நான்கு இடங்களில் தேயிலை எஸ்டேட்கள் இருந்தாலும் மாஞ்சோலை என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது.

சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம் 1929-ம் ஆண்டு 'தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த குத்தகை காலம் வரும் 2028-ம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் மேற்கொண்டு குத்தகை நீட்டிக்கப்படவில்லை.. ஏனெனில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்திருப்பதால், வரும் 2028-ம் ஆண்டுக்குள் வெளியேறுமாறு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தேயிலைத் தோட்ட நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக தேயிலை தோட்டத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டிக்க தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் விரும்பவில்லை..அத்துடன் தேயிலை பயிர்களை பயிரிடுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறவும் முடிவு செய்தது. அதற்காக அங்குள்ள தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் செல்லுமாறு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் பலரும் விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை பெற்று கையெழுத்திட்டு விடைபெற்றனர். அதேநேரம் குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்னரே பிபிடிசி நிறுவனம் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தொடங்கியது.

இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம். அங்கு வாழ்ந்து வந்த 700 குடும்பங்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.இதனிடையே மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்தக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து மாஞ்சோலை தொழிலாளர்கள் ஏராளமானோர் கடந்த ஆண்டு வெளியேறினார்கள்.

இதனிடையே 100 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேற மனம் இன்றி இன்னும் சிலர் அங்கேயே தங்கியிருக்கிறார்கள். அவர்களும் தற்போது வெளியேற தொடங்கி உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பி.பி.டி.சி நிர்வாகம் ஆலையை மூடிவிட்டால் தேயிலைப் பறிக்கும் தொழில் அவர்களுக்கு கிடைக்கவில்லை . இதனால் வாழ்வாதாரம் தேடி சமவெளிப்பகுதிக்கு அவர்கள் செல்ல தொடங்கி உள்ளார்கள். பல கனவுகளுடன் 100 ஆண்டுகள் வாழ்ந்த அவர்கள், இப்போது அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். பிறந்த மண்ணை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்வது என்பது கவலைக்குரியது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-
பாஜகவுக்கு நெல்லை இல்லை! நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவதற்கு இப்படி ஒரு காரணமா? பேட்டர்னை பாருங்க! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications