திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயிச்சிட்டீங்க.. இதை வெச்சு என்ன செய்ய போறீங்க?.. 37 பேரை வச்சு ஒன்னும் செய்ய முடியாது.. சீமான்

திமுகவின் வெற்றி குறித்து சீமான் திருநெல்வேலி கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நெல்லை: பிரபாகரன் இறந்துட்டார்னு சொல்றாங்களே, நீங்க இங்க வந்து உங்க குடும்பத்துக்கு பதவிக்காக நிக்கறீங்களே" என்று கருணாநிதியிடம் கேட்டார்கள். அதற்கு முத்தமிழ் அறிஞர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? "சங்க இலக்கியங்களில் ஒரு தெருவில் பறை சத்தம் கேட்டாலும், இன்னொரு தெருவில் மங்கள இசையும் கேட்டிருக்கிறது" ன்னு சொன்னார். இப்போ சொல்றோம், எங்களுக்கும் ஒரு காலம் வரும், எங்கள் தெருவிலும் மங்கள இசை கேட்கும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

17.5 லட்சம் வாக்கு இப்போ விழுந்திருக்கு. நம்மை எதிர்ப்பவர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள், அது நேர்மையாக விழுந்த வாக்கு என்று! இதுல இருந்து என்ன தெரியுது.. தூய அரசியல் வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

ஆனா இந்த தேர்தலில் நமக்கான வாக்குகள் குறைந்துள்ளது. இதற்கு காரணம், இவங்க வந்தால், பிஜேபி வந்துடும்னு சொல்லி சொல்லியே குறைச்சிட்டாங்க. நம்மை கேடயமாக வைத்து ஒளிந்து நின்று வென்றிருக்கிறார்கள்.

காங்கிரஸின் பணியை மக்களின் இதயங்களை விட்டு நீக்க முடியாது - சோனியாவுக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின் காங்கிரஸின் பணியை மக்களின் இதயங்களை விட்டு நீக்க முடியாது - சோனியாவுக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்

சேவை வரி

சேவை வரி

ஆட்சி கவிழ்ப்பு பத்தியே திமுக தலைவர் பேசினாரே, ஏன் பாஜகவை பத்தி பேசவில்லை? பணமதிப்பு இழப்பில் ஏற்பட்ட பாதிப்பை, சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்ட பாதிப்பை பற்றி கூராய்ந்து பேசிய ஒரு பேச்சு உண்டா? மாட்டுக்கறி தின்றவனை அடித்து கொன்றது பத்தி ஒரு கண்டன பேச்சு உண்டா?

ஒண்டிக்கு ஒண்டி

ஒண்டிக்கு ஒண்டி

இங்கே, இவங்களுக்கு பிரச்சனை என்னன்னா, இவ்வளவு காசு கொடுத்தும் சீமானுக்கு ஓட்டு போட்டு இருக்காங்களேன்னுதான். திமுக தனியா, நாங்க தனியா,.. ஒண்டிக்கு ஒண்டி.. ஆனா ஓட்டுக்கு காசு தரக்கூடாது.. கூட்டத்துக்கும் காசு கொடுத்து ஆள் கூட்டி வர கூடாது. நாம மோதறோம்.. எப்ப வச்சுக்கலாம் நம்ம மோதலை? இப்ப வெற்றியை அடையல.. வாங்கிட்டாங்கன்னுதான் சொல்லணும்.

என்ன பண்ண போறீங்க?

சரி.. இப்ப ஜெயிச்சிட்டீங்க.. இதை வெச்சு என்ன செய்ய போறீங்க? ஒன்னும் செய்ய முடியாது. அந்த அம்மா கையில 37 பேர் இருந்தே ஒன்னும் பண்ண முடியல. இப்போ ஒன்னும் இல்லாதவங்ககிட்ட 37 பேர் இருந்தா மட்டும்?

கருணாநிதி

கருணாநிதி

மே 18, 2009.. போர் முடிஞ்சிடுச்சு.. பிரபாகரன் இறந்துவிட்டார்னு பத்திரிகை சொல்லுது. ஆனால் தன்மான தலைவர், தமிழ் இனத்துக்கு தலைவர், தானே தலைவர், ஒப்பற்ற தலைவர், டாக்டர் கலைஞரை.. சக்கர நாற்காலியில வச்சு குடும்பதே தள்ளிக்கிட்டு போகுது அம்மையர் சோனியா காந்திக்கிட்டே. எதுக்கு? பதவி பிச்சை!

மங்கள இசை

மங்கள இசை

இதை போய் அவருகிட்ட கேட்கறாங்க, "பிரபாகரன் இறந்துட்டார்னு சொல்றாங்களே, நீங்க இங்க வந்து உங்க குடும்பத்துக்கு பதவிக்காக நிக்கறீங்களே" என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு முத்தமிழ் அறிஞர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? "சங்க இலக்கியங்களில் ஒரு தெருவில் பறை சத்தம் கேட்டாலும், இன்னொரு தெருவில் மங்கள இசையும் கேட்டிருக்கிறது" ன்னு சொன்னார். இப்போ சொல்றோம், எங்களுக்கும் ஒரு காலம் வரும், எங்கள் தெருவிலும் மங்கள இசை கேட்கும்.

English summary
Seeman questioned DMK Party and criticized Kalaignar Karunanidhi, MK Stalin in Nellai Public Meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X