உமா மகேஸ்வரி கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு அதிரடி மாற்றம்!
உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
நெல்லை: கொலையாளியை நெல்லை மாநகர போலீசார் கைது செய்த நிலையில், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 23-ம் தேதி நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன், வேலைக்கார பெண் மாரி ஆகியோர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இது நெல்லை உட்பட திமுக தரப்பில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை உடனே பிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவிக்கவும் இந்த பரபரப்பு அதிகமானது.
இதனிடையே, 3 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர், திடீரென உமா மகேசுவரி வீட்டுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொலையாளிகள் விழுந்த கிடந்த இடங்களை போட்டோவும் எடுத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துவிட்டு கிளம்பி சென்றனர்.
நெல்லை போலீசார் விசாரித்து வரும் நிலையில், திடீரென சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவேளை இந்த வழக்கு சிபிஐடிக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், நாங்களே குற்றவாளியை கைது செய்வோம் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உறுதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஒரு துப்பும் கிடைக்காத நிலையில், இந்த 6 நாட்களுக்குள் கொலையாளியை போலீசார் அதிரடியாக கைது செய்து வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications