Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தங்கை" முறை பெண்ணுடன் திருமணம்.. இளைஞரின் பிடிவாதம்.. வெட்டியே கொன்ற குடும்பம்.. பெண் தற்கொலை!

காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டி கொல்லப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: அண்ணன் - தங்கை உறவு முறையாம்.. இது தெரிந்தே கல்யாணம் செய்த அந்த இளைஞரை வெட்டியே கொன்றுவிட்டனர்.. இளைஞர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, அந்த பெண்ணும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்,.

நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் வேல் தேவர்... இவர்களது மகன்கள் சுடலை ராஜ் மற்றும் இசக்கிமுத்து.. இவர்கள் 2 பேருமே பழைய பேட்டை பகுதியில் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.

சுடலை ராஜின் மனைவி சமீபத்தில் உயிரிழந்து விட்டார்.. அதனால், அவரது மகன்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரர் இசக்கி முத்து மனைவியும் அவரது மகளும் செய்து தந்து வந்தனர்.

 கள்ளக்காதல்

கள்ளக்காதல்

அப்போதுதான், சுடலை ராஜின் மூத்த மகன் காளிராஜ் என்பவருக்கும். இசக்கி முத்துவின் மகள் மேகலாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.. கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்தான் காளிராஜ். அண்ணன் - தங்கை உறவு முறை கொண்ட இவர்கள் காதலிப்பது குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டது.. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இவர்கள் 2 பேரையும் கண்டித்து வந்தனர்.

 தங்கை முறை

தங்கை முறை

ஆனாலும், காளிராஜ், மேகலா அதனை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. ஒருகட்டத்தில் எரிச்சல் அடைந்த 2 பேருமே ஓடிப்போய் கல்யாணம் செய்து கொண்டனர்.. மேலும், நெல்லை பாளையங்கோட்டை சட்ட கல்லூரி அருகே ரஹ்மத் நகர் சாலையில் ஒரு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கொலை

கொலை

கடந்த 10ம் தேதி காளிராஜ் வேலையை விட்டு வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அவரது பைக்கை வழிமறித்த கும்பல் ஒன்று, காளிராஜை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டது.. இந்த தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்... அப்போதுதான், இது காதல் திருமணத்தால் நிகழ்ந்த கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் வலுத்தது.

 தற்கொலை

தற்கொலை

அது தொடர்பாக விசாரிக்கும்போதுதான், அதே கும்பல், மேகலாவுக்கும் குறி வைத்திருப்பது தெரியவந்தது.. இந்த தகவல் அறிந்த போலீசார் மேகலை உடனடியாக பாளையங்கோட்டை அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். ஆனாலும், அதே விடுதியில் மேகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... சம்பவம் நடந்த சமயம், விடுதியில் அனைவரும் சாப்பிட சென்றுவிட்டனர்..

பரபரப்பு

பரபரப்பு

அறையில், யாருமே இல்லாததை அறிந்து மேகலா தூக்கில் தொங்கினார்.. ஆனால், உயிர் துடிதுடித்தபடியே இருந்ததால், அலறி துடித்துள்ளார்.. அந்த சத்தம் கேட்டுதான், சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் ஓடிவந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் உயிர் போய்விட்டது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கவும் அவர்கள் விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். திருமணம் செய்து கொண்ட 2 பேருமே அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+