திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி

Google Oneindia Tamil News

நெல்லை: கோடை வெயில் வறுத்தெடுத்து வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் சாரல் மழை பெய்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

people of Tamil Nadu are happy ...relieved from heat by heavy pouring rain

தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று இரவு முதலே விடிய விடிய பரவலாக மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின் படி இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகர், சாத்தூர், டெல்டா பகுதிகளான திருவாரூர் சுற்றுவட்டார பகுதி மற்றும் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

இதனிடையே நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகேயுள்ள சின்னாளகம்பை என்ற கிராமத்தில், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது வெட்டிய மின்னல் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா? ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல் ஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா? ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்

சாலை வசதி இல்லாததால் அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மாலை முதல் மழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
There is a widespread rainfall on the third day in different parts of Tamil Nadu. heavy rains in different parts of Nellai district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X