பார்சல் கட்ட தாமதமானதால் ஆத்திரம்.. ஹோட்டலை சூறையாடி, ஊழியரை சரமாரியாக வெட்டிய கும்பல்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஹோட்டல் ஊழியரை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை சேர்ந்தவர் சகாய பிரவீன்.
இவர் முக்கூடலில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சிலர் அந்த ஹோட்டலுக்கு வந்து உணவு பார்சல் கட்டும்படி கேட்டுள்ளனர்.

ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உணவு பார்சல் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் திடீரென ஹோட்டலுக்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை சூறையாடினார்கள். ஹோட்டல் ஊழியர் சகாய பிரவீனையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்கள்.
இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சகாய பிரவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹோட்டலை சூறையாடியும், ஊழியரை வெட்டியும் அராஜகத்தில் ஈடுபட்ட கும்பலை கண்டித்து வியாபாரிகள் அப்பகுதியில் கடைகளை அடைத்தனர்.
மேலும், அந்த கும்பலை கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பொதுமக்களும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications