ரூ.4 கோடி பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதா? திமுக புகாருக்கு நெல்லை கலெக்டர் விளக்கம்
நெல்லை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையில் பிடிபட்ட ரூ.4 கோடி குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த பணம் நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக திமுக அளித்த புகாரை தொடர்ந்து நெல்லை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். மேலும் தேர்தலை முறைகேடு, பணப்பட்டுவாடா இன்றி நியாயமான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 6ம் தேதி இரவில் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 3 கோடியே 99 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை புரசைவாக்கம் தனியார் விடுதி பா.ஜ.க உறுப்பினர் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் தனக்கும், அந்த பணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் சமயம் என்பதால் ஆளும் திமுக அரசு என்னை டார்க்கெட் செய்கிறது. நெல்லையில் நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற அச்சத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என கூறியிருந்தார். மேலும் பறக்கும்படையை பொறுத்தமட்டில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த வகையில் ரூ.3.99 கோடி பணம் பறிமுதல் பற்றியும் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பினார். அதில் கடிதம் அனுப்பினார். அதில், நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அனைத்து பா.ஜ.க வேட்பாளர்களுக்கும் சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து நெல்லையில் சிலரது வீடுகளில் பறக்கும்படை சோதனை நடத்தி ரொக்கப்பணம், சேலை, வேஷ்டி, பரிசு பொருட்களை பறிமுதல் செய்தது. இவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக நெல்லை கலெக்டரும், நெல்லை லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது திமுக அளித்த புகார் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், ‛‛புகார் தொடர்பாக ரூ. 2 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை விசாரிக்கிறது. அதுதொடர்பாக இன்னும் வருமான வரித்துறையிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை'' என்றார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications