அசரடித்த அப்பாவு.. ராதாபுரத்தில் "அதை" பார்த்தீங்களா..சபாஷ் தமிழ்நாடு அரசு.. திகைப்பில் திருநெல்வேலி
திருநெல்வேலி: தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு முன்னெடுத்த முயற்சியால், திருநெல்வேலி மாவட்டமே பூரித்து கிடக்கிறது.. என்ன நடந்தது ராதாபுரம் தொகுதியில்?
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் நிறைய அதிரடிகளை செய்து கொண்டிருக்கிறது.
தமிழக அரசு: அதேபோல, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வி அல்லது பட்டயப்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்திற்கு ரூ 698 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுமைப் பெண் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்திருந்தார். சென்னையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
ஸ்மார்ட் வகுப்பறை: அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "தமிழகத்தில் அடுத்த 4 வருடங்களில் ரூ.150 கோடியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்..
இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு, தன்னுடைய தொகுதியான, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில், மேம்பாட்டு நிதி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் பெற்ற நிதி உட்பட, பிற நிதியில் இருந்து, 6.86 கோடி ரூபாய் செலவில், 303 பள்ளிகளில், "ஸ்மார்ட் கிளாஸ் ரூம்" திறன் வகுப்பறைகளை உருவாக்கி உள்ளார்.. இந்த வகுப்பறைகளை, முதல்வர் ஸ்டாலின், தலைமைச்செயலகத்தில் இருந்தபடி 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.

ராதாபுரம்: ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு ஏற்பாட்டில் அரசு பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். திருநெல்வேலி திசையன்விளை: ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு ஏற்பாட்டில் அரசு பள்ளி, கல்லூரிகளில், ரூ.7 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் செலவில், 306 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சபாநாயகர் அப்பாவு அப்போது பேசும்போது, "அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலம் பயில வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம், ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தொடங்கி வைத்தார்.. அதன்படி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் ஆங்கிலத்தில் எளிமையாக பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழகத்தில் முதல் முதலாக ஒரு சட்டமன்ற தொகுதி முழுவதும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டது ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில்தான்... இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் உயர் தொழில்நுட்பத்திறனை பயன்படுத்தி மாணவர்கள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலும் ஆங்கில பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தலா 30 நிமிடம் வீதம் 3 பிரிவுகளாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இலவச சைக்கிள்கள் இதனை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர் வட்டார கல்வி அலுவலர் மற்றும் தாளாளர்களுக்கு ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்கள்: முதலமைச்சர் ஸ்டாலின் கல்வியை உலக தரத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.. மாணவர்கள் எதிர்காலத்தில் உயரிய இலக்கை நிர்ணயித்து திட்டமிட்டு நன்றாக படிக்க வேண்டும்" என்றார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications