திருநெல்வேலியில் மங்கி குல்லாவுடன் யாரது? 4 மாசம் படாதபாடு பட்ட நெல்லை.. 278 சவரன் நகையா? சூப்பர்ல்ல

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருநெல்வேலியில் நகைக்கடையில் நடந்த கொள்ளையானது, போலீசாருக்கு மிகப்பெரிய சவாலை தந்துவிட்டது.. இறுதியில் 4 மாதங்களுக்கு பிறகு போலீசார், மிகவும் சிரமப்பட்டு கொள்ளையனை கண்டுபிடித்துள்ளார்கள். என்ன நடந்தது?

நெல்லை அருகே உள்ளது மூலைக்கரைப்பட்டி.. இங்கு வசித்து வருபவர் ஆரோக்கிய ரெமன்... இவர் அதே பகுதியில், பாத்திரக்கடையும், அத்துடன் தங்க நகை அடகுக்கடையையும் வைத்து நடத்தி வருகிறார்.

tirunelveli nellai monkey kulla


இந்த அடகுக்கடையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி, 278 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு, மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துவிட்டது. இதனால் போலீசில் புகார் தரப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது..

வழக்கில் சிக்கல்: ஆனால், இந்த வழக்கில் துப்பு துலக்குவதில் போலீசாருக்கு வழக்கில் சிக்கல் ஏற்பட்டது. எந்த க்ளூவும் கிடைக்காமல் திணறினார்கள்.. காரணம், இந்த அடகுக்கடையின் பின்பக்க ஜன்னலை உடைத்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துள்ளனர். மேலும், நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் தப்பிச் சென்றுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், அடகுக்கடையில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்படவில்லை.

இதனால், அந்த கடைத்தெருவிலுள்ள மற்ற சிசிடிவி கேமராக்களை ஆராயும் நிலைமை ஏற்பட்டது. அப்போதுதான், "மங்கி குல்லா" அணிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. ஆனால், அந்த மங்கி குல்லா நபர்கள் யாரென்று தெரியவில்லை. இதனால் போலீசார் இன்னும் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு, கடைசியில் திருடனை சுற்றிவளைத்து பிடித்துவிட்டனர்.

தனிப்படை: 4 மாதங்களுக்கு பிறகு, குற்றவாளியை போலீசார் பிடித்துள்ளனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் சொல்லும்போது, "இந்த கொள்ளை சம்பவத்துக்காகவே 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.. மூலைக்கரைப்பட்டியிலிருந்து ரெட்டியார்பட்டி வரையுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.

அதில் மங்கி குல்லா அணிந்த மர்மநபர் ஒருவர், பைக்கில் தப்பிச்சென்றது பதிவாகியிருந்தது. கொள்ளை நடந்த முந்தைய நாளில், அடகுக்கடையை யாராவது நோட்டமிட்டார்களா? என்று சிசிடிவி கேமராவிலேயே ஆராய்ந்தோம். வேறு எங்காவது நகைக்கடையில் கொள்ளை நடந்ததா என்றும் ஆராய்ந்தோம். எங்குமே நகை திருட்டு நடக்கவில்லை. மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் விசாரித்தும், மங்கி குல்லா கொள்ளையன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

திணறிய போலீஸ்: வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அடகு கடையில் கொள்ளை நடத்தியிருக்கிறார்கள் என்றால், தெரிந்தவர்களே உதவியிருக்க கூடும் என்ற சந்தேகமும் எழுந்தது. அதனால் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும் எந்த க்ளூவும் கிடைக்கவில்லை. கொள்ளை சம்பவம் நடந்தபோது, சந்தேக நபர்களின் செல்போன் நபர்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், கொள்ளையன், செல்போனை பயன்படுத்தவேயில்லை என்பது தெரியவந்தது.

இப்படி எந்த க்ளூவும் கிடைக்காதபோது, மறுபடியும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தோம். அப்போதுதான், சில நாட்களுக்கு முன்பு, தலையில் குல்லா அணிந்து ஒருவர், அடகுக்கடையை நீண்டநேரமாக நோட்டமிடுவதை கவனித்தோம்.. அப்போது, நாங்குநேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜகுமாரிதான், அந்த குல்லா நபர், கடந்த 2014ல் நாசரேத்தில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் போல உள்ளதாக சந்தேகித்தார்.

தனிப்படை:
இதனால், நாசரேத் திருட்டு சம்பவம் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்தோம். அப்போதுதான், ரெட்டார்குளம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் சிக்கினார்.. அவர் செகந்தராபாத்தில் இருப்பதை கண்டுபிடித்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று ராமகிருஷ்ணனை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இறுதியில், அடகுக்கடையில், மங்கி குல்லா அணிந்து, 278 சவரன் தங்கநகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.

கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை தன்னுடைய அம்மா மீனாட்சிக்கு தந்துள்ளார் ராமகிருஷ்ணன். மீனாட்சியிடமிருந்து 140 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மிச்ச நகைகளை எங்கே வைத்திருக்கிறார் என்று ராமகிருஷ்ணனிடம் விசாரித்து வருகிறோம்.. இதற்கு நடுவில், போலீசாரின் விசாரணைக்குப் பயந்து, மீனாட்சி அம்மா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..

தெலுங்கானா: ராமகிருஷ்ணனுக்கு திருட்டுதான் பிரத்யேக தொழிலாக இருந்துள்ளது.. எப்போதுமே தனியாக சென்றுதான் திருடுவாராம். மங்கி குல்லா அணிந்து திருடுவதே இவரது பாணியாக இருந்துள்ளது.

எப்போதுமே கொள்ளையடித்துவிட்டு, தெலுங்கானாவுக்கு போய்விடுவாராம். அங்கே சில காலம் தலைமறைவாக இருந்துவிட்டு, மறுபடியும் சொந்த ஊருக்கு வந்துவிடுவாராம். தெலுங்கானாவிலேயே அவர் மீது 7 திருட்டு கேஸ்கள் இருக்கிறது" என்கிறார்கள் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+