Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனம் பதற வைக்கும் கொடூரம்! 75 வயது தாத்தாவின் வக்கிரம்-பாம்பு கடித்து இறந்த சிறுமிக்கு நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியை 3 மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்.

Recommended Video

    8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்....அதை வீடியோவாக எடுத்த இளைஞர்கள்

    சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியில் தனியார் செங்கல் சூளையில் பெண் ஒருவர் கூலி தொழில் செய்து வருகிறார்.

    இவரது தம்பியின் 8 வயது மகள் தாய், தந்தை இல்லாததால் தனது அத்தையுடன் தங்கி அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தார்.

     பாம்பு கடித்து பலி

    பாம்பு கடித்து பலி

    கடந்த 24ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த விடியோவை அப்பகுதி இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

    முதியவர் பாலு

    முதியவர் பாலு

    இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் பாலு என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

    வீடியோ

    வீடியோ

    இதனை கண்ட கண்ணன் என்ற நபர் மறைந்திருந்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் தமது நண்பர்களுக்கு பதிவிட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 75 வயது முதியவர் பாலு, சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர், கண்ணன் என 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்,

    போக்சோ

    போக்சோ

    அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு முன் சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் பாலு மற்றும் அந்த வீடியோவை பகிர்ந்த நபர்கள் என 6 பேரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+