தலைவர் பதவியை ராஜினாமா செய்யாத திமுக! கொதிக்கும் காங்கிரஸ்! ஸ்ரீபெரும்புதூர் அரசியல் கலாட்டா!
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்ற திமுக நகரச் செயலாளர் மனைவி இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை.
இதனால் திமுக காங்கிரஸார் இடையே அங்கு மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

திமுக வெற்றி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வெற்றி பெற்றன. இதில் தலைவர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக கவுன்சிலர்கள், காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரிக்கு எதிராக திமுக நகரச் செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தியை போட்டியிட வைத்து 11 வாக்குகள் செலுத்தி வெற்றிபெற வைத்தனர்.

வெறும் 4 வாக்குகள்
காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரி வெறும் 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தன்னை சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

திமுகவினர் நாடகம்
இதனிடையே ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகரச் செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்ய வில்லை.
இதனால் கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவின் மாவட்டச் செயலாளர் நாடகம் ஆடுவதாகவும் அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலேயே இது போன்ற செயல் நடைபெற்றதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

காங்கிரஸ் உறுதி
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு செண்டிமெண்டான பேரூராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குதான் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பால் உயிரிழந்தார். இதனால் எப்பாடு பட்டேனும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது.
-
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்











Click it and Unblock the Notifications