சாப்பிட்ட இலை.. வீரலட்சுமி வீட்டு முன்பு விழுந்து.. பூவை கணேசன் மண்டை உடைந்து.. திகுதிகு திருவள்ளூர்
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வேப்பட்டில் ஏற்பட்ட தகராறில், தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமியின் கணவர் மீது 4 பேர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு, பிரியா நகர், எம்.ஆர்.கே.தெருவைச் சேர்ந்தவர் கணேசன்.. 43 வயதாகிறது.. இவர், தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமியின் கணவர் ஆவார்.

வீரலட்சுமியை தமிழக மக்களுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமான நிலையில், அவரது கணவர் பற்றின தகவல் அவ்வளவாக பலருக்கும் தெரியாமலேயே இருந்தது. கடந்த வருடம், சீமான் - விஜயலட்சுமி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோதுதான், வீரலட்சுமியுடன் சேர்ந்து அவரது கணவரின் பெயரும் பிரபலமானது. அதுவும் சீமானை பாக்சிங் போட்டிக்கு அழைத்தபோதுதான், கணேசனின் பேட்டிகளும் மீடியாக்களில் பிரபலமாகின.
வீரலட்சுமி: தனக்கு எதிராக புகார் கொடுத்த விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி தம்பதியினர் செயல்பட்டதால், சீமான் செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்தார்.. அதில், "இடத்தையும், தேதியையும் குறிக்க சொல்லுங்க. நான் சண்ட போட வர்றேன். பூவை கணேசனுக்கு என் கையால தான் சாவுனு எழுதி இருந்தா அதை யாரு மாத்த முடியும்" என்றார்.
இதற்கு பிறகு பூவை கணேசன் தந்திருந்த பேட்டியில், "தன்னை தானே புலின்னு சீமான் சொல்லிக்கிறார். நீ கொட்டை எடுத்த புளி.. நான் பாயுற புலி. தனியா நின்னு 10 பேரை அடிக்குறவன் தம்பி நான். நீ என்ட்ட சிங்கிளா மாட்டுன உன்ன அடிச்சு துவைச்சு காயப் போட்ருவேன்.. தம்பி, ஷார்ப்பா இருக்குற கத்தி சவுண்டே போடாது தெரியுமா தம்பி. மொக்க கத்திதான் சவுண்டு போடும்" என்றெல்லாம் பூவை கணேசன் பேசியிருந்தது இணையத்தில் அப்போது டிரெண்டானது.
பாக்சிங் விவகாரம்: விஜயலட்சுமி புகாருக்கு பிறகு, பாக்சிங் விவகாரம் என்ன ஆனது என்று தெரியவில்லை.. இப்போது பூவை கணேசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இவரது வீட்டருகே வசித்து வருபவர் வெங்கடேசன்.. இவரது உறவினர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்..
இதையடுத்து, உயிரிழந்தவருக்காக 16-ம் நாள் காரிய நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்துகொண்டிருந்தது.. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மதிய உணவு சாப்பிட்டார்கள்.. பிறகு அவர்கள் உணவு சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும், வெங்கடேசன் தரப்பினர் கணேசன் வீட்டருகே கொட்டியதாக கூறப்படுகிறது.
ஆவேசம்: இந்த விஷயம் தெரிந்ததுமே கொந்தளித்துபோன கணேசன், வெங்கடேசனிடம், "சாப்பிட்ட இலையை என் வீட்டருகே ஏன் கொட்டுகிறீர்கள்" என்று கேட்டார்..
இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில், வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்களான மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய 4 பேர், கட்டையால் கணேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் படுகாயமடைந்த கணேசன், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
கணேசனின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது.. அவரது தலையில் 25 தையல்கள் போடப்பட்டுள்ளதாம்..
பரபரப்பு: இதுகுறித்து, செவ்வாப்பேட்டை போலீஸாரும் வழக்கு பதிவு செய்து, கணேசனை தாக்கிய மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications