Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராம நத்தம் புறம்போக்கு நிலம்.. போலி பட்டாவில் சிக்கிய பிரபல சோப் கம்பெனி? திருவள்ளூர் சோழவரம் பரபர

Subscribe to Oneindia Tamil

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனியார் சோப்பு நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டத்தில், தனியார் வசமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒவ்வொன்றாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள்.. ஆனால், இந்த ஆக்கிரமிப்பு நிலங்களை அதிகாரிகள் மீட்கச்செல்லும்போது சம்பந்தப்பட்ட தனியார் சார்பில் எதிர்ப்புகள் கிளம்பிவிடுகின்றன..

Squatter lands Tiruvallur

அதனால்தான், போலீசார் உதவியுடன், பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இந்த இடங்களை இடித்து அகற்வி வருகிறார்கள்.. அப்படித்தான், சோழவரம் பகுதியிலும் ஆக்கிரமிப்பு நடந்திருக்கிறது.

சோழவரம்: சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் 14.5 ஏக்கர் கிராம நத்தம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இந்த நிலம் தனியார் சோப்பு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. 20 வருடத்துக்கும் மேலாக போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த நிலம் , வருவாய்த் துறையினரால் கடந்த 2022ம் ஆண்டு மீட்கப்பட்டு வருவாய்த்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

ஆனால், மறுபடியும் தனியார் சோப் நிறுவனம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து, அலுவலகம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவற்றை கட்டி பயன்படுத்த துவங்கிவிட்டது..

கிராம மக்கள் புகார்: எனவே கிராம மக்கள், இதுகுறித்து வருவாய்த் துறையிடம் புகார் அளித்தனர்.. இந்த புகாரின் அடிப்படையில், அரசுக்கு சொந்தமான அந்த நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இப்பணியில், பொக்லைன்இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிரடியாக அகற்றப்பட்டு, ரூ.150 கோடி மதிப்பிலான அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டுள்ளது.. எனினும், இதில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க சோழவரம் போலீசார் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

நிலத்தகராறு: அதேபோல, வருவாய்த் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்ட இந்த நிலம் தொடர்பாக, மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ரவுடி நாகேந்திரனுக்கு இடையே பிரச்சினை இருந்துவந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மோதலால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால், இந்த தகவலை வருவாய்த் துறை அதிகாரிகளோ, போலீஸாரோ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+