திருத்தணி கோயிலில் ஆச்சரியம்.. நாளை ஆடிக்கிருத்திகை.. இன்றே தமிழக அரசு சொன்ன இன்ப செய்தி.. சூப்பர்ல
திருவள்ளூர்: திருத்தணியில் ஆடிக்கிருத்திகையையொட்டி, தமிழக அரசு சர்ப்ரைஸ் ஒன்றை தந்துள்ளது.. இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருக்கும் குட்நியூஸ் என்ன தெரியுமா?
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு என்று போற்றப்படும் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை பெருவிழா 27.07.2024 முதல் 31.07.2024 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

ஆலோசனை கூட்டம் : நாளை முதல் 5 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கடந்த 23-ந்தேதி அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது இந்த கூட்ட முடிவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்ட நிர்வாகம், காவல் துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை போன்ற துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்..
பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "கடந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழாவின்போது சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்த நிலையில், இந்த வருடம் 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் 160 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன.
மின்விளக்குகள்: திருக்கோயில் வளாகம், மலைப்பாதை முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டும், திருக்கோயிலும் 4 பிரகாரங்களில் வெயிலிருந்து பக்தர்களை காக்கும் வகையில் தேங்காய் நார் தரை விரிப்புகள் அமைக்கப்பட்டும், அதில் அவ்வபோது தண்ணீர் பீச்சியும், பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழிவகை ஏற்படுத்தப்படும்.
அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், 4 தற்காலிக பேருந்துகள் அமைக்கவும், தென்னக இரயில்வேயின் மூலம் சிறப்பு இரயில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் உபயதாரர்கள் பங்களிப்புடன் 50,000 நபர்களுக்கு உணவு வழங்கப்படவுள்ளது. சிறப்பு மருத்துவக் குழுக்கள், அரசு மருத்துவக் கல்லூரி, அப்பல்லோ மருத்துவமனை, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை, காவேரி மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பவுர்ணமி: திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோலவே, இந்த வருட ஆடிக்கிருத்திகை விழாவிற்கு 200 ரூபாய் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம்" என்று கூறியிருந்தார்.
அப்போது பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய 2 திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ரூ.200-யை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கோயில் நிர்வாகம்: இந்த கோரிக்கையின் அடிப்படையில் கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட கோவில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதியும் கோரப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு தரிசன நுழைவுக் கட்டண ரூ. 200-ஐ குறைத்து ரூ.100 ஆக தற்போது நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களுக்கு சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200லிருந்து ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி: திருத்தணியில் ரூ.200 /- சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.100/- ஆக குறைக்கப்பட்டுள்ளது பக்தர்களிடம் பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications