கர்ப்பமா இருக்கேன்னு சொன்னேன்.. ஆனா அப்பா என் வயித்துலயே எட்டி உதைச்சாரு.. மகள் கண்ணீர் வீடியோ
மகளின் முகத்தில் ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
திருவள்ளூர்: "நான் கர்ப்பமா இருக்கேன்..ன்னு சொன்னேன். என் வயித்துலயே என் அப்பா எட்டி எட்டி உதைச்சாரு.. கொலை பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டினாரு" என்று காதல் திருமணம் செய்த பெண் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி - பாக்கியலட்சுமி... இவர்களது மகன் சாய்குமார்.. 24 வயதாகிறது.. ஏசி மெக்கானிக்காக சென்னையில் வேலை பார்க்கிறார்.
இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தீபிகா என்ற பெண்ணை காதலித்தார்.. தீபிகாவின் அப்பா விருப்ப ஓய்வு பெற்ற ஏட்டு பாலகுமார் ஆவார்.. 6 வருடமாக தீபிகாவும் - சாய்குமாரும் காதலித்து வருகிறார்கள்.

கர்ப்பிணி
விஷயம் வீட்டுக்கு தெரிந்தது.. மகளை கண்டித்தும் கேட்கவில்லை.. எதிர்ப்பு அதிகமாக கிளம்பவும் தீபிகா - சாய்குமார் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கடந்த ஜுன் மாதம், பெங்களூரில் கல்யாணம் செய்து கொண்டனர்.. இப்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். பெங்களூரில் இருந்து வேப்பம்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மனைவியை அழைத்து வந்தார் சாய்குமார். அப்போது விஷயம் அறிந்த தீபிகாவின் தந்தை ஏட்டு, 4 பேரை கூட்டிவந்து மகள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்.

மாமியார்
அதை தடுக்க வந்த மாமியார் உட்பட2 பெண்கள் மீதும் ஆசிட் ஊற்றினார்.. பின்னர் மகளை காரில் செல்லவும், இதுகுறித்து மாமியார் வீட்டில் போலீசில் தகவல் சொன்னார்கள்.. அதனால் பயந்துபோன ஏட்டு, நடுவழியில் மகளை இறக்கிவிட்டு தப்பி விட்டார். இப்போது தீபிகா உட்பட 3 பேருமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையின்போது, போலீசாரிடம் தீபிகா நடந்த விவரத்தை கூறியுள்ளார். இது சம்பந்தமாக பேசி வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் சொன்னதாவது:

வீடியோ
"என் பேரு தீபிகா.. என் கணவர் பெயர் சாய்குமார்.. நான் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. அது என் ஃபேமிலிக்கு புடிக்கல.. கல்யாணம் பண்ணினதுல இருந்து என் அப்பா என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டே இருந்தாரு.. காலைல என் மாமியார் வீட்டுக்கு வந்தார்.. அடியாளுங்களை நாலஞ்சு பேர் கூட்டிட்டு வந்தார்.. நல்லா பேசிற மாதிரியே என்கிட்டே பேசினார்.. திடீர்னு மயக்க மருந்து என் முகத்துல அடிச்சு.. என்னை கடத்திட்டு போய் ஸ்ரீபெரும்புதூரில் வெச்சு.. என்னை அடிச்சாரு.

தலைமறைவு
நான் இப்போ கர்ப்பமா இருக்கேன்.. என் வயித்துலயே எட்டி எட்டி உதைச்சு கொடுமைப்படுத்தினாரு.. கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினாரு.. என் அம்மாவுக்கு சீரியஸ்ன்னு சொல்லி கூப்பிட்டு போனாங்க.. அதுக்கப்பறம் என் மாமியார் குடும்பம் போலீசில் புகார் தந்ததால இந்த விஷயம் தெரிஞ்சு என்னை மெயின் ரோட்டில் இறக்கி விட்டுட்டாரு.. " என்று கண்ணீர் மல்க பேசினார். இப்போது ஏட்டு பாலகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடி.. வினாத்தாளை மாற்றி கொடுத்த அதிகாரி.. சுற்றி வளைத்த அரசு ஊழியர்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications