பொன்னேரி அருகே ரயிலை கவிழ்க்க சதியா? திடீர் பரபரப்பு.. ரயில்வே போலீசார் தீவிர விசாரணை!
திருவள்ளூர் : பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரயிலை கவிழ்க்க சதித் திட்டமா என ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாலை 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டன.

தண்டவாளத்தில் உள்ள சிக்னலை மாற்றுவதற்கான கருவியின் போல்ட்கள் கழற்றப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரயிலை கவிழ்க்க சதியா அல்லது ஊழியர்களின் கவனக்குறைவா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 4 நாட்களுக்கு முன்பு பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டு உள்ளதால், வடமாநிலங்களை இணைக்கும் சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications