Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவள்ளூர் பரபரப்பு! மெழுகுவர்த்தி தர லேட்டானதால் விபரீதம்.. அப்பாவை அடித்த கொன்ற மகன்!

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதியில் மின்வெட்டு சமயத்தில், மெழுகுவர்த்தி கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் மகனே தந்தையை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அருகே வெங்கத்தூர் துலுக்கானத்தம்மன் தெருவில் வசிப்பவர் பாலகிருஷ்ணன்.

50 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி மகேஸ்வரிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்

தந்தை மகன்

தந்தை மகன்

இந்நிலையில், பாலகிருஷ்ணன் தனது மனவளர்ச்சி குன்றிய 27 வயதான மகன் பாண்டியன் என்பவருடன் மணவாளநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் பாலகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் தினக் கூலிக்கு வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே மகன் பாண்டியனுக்கும் பாலகிருஷ்ணனுக்கு அடிக்கடி சிறு சிறு சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கொலை

கொலை

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பாண்டியன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து சமீபத்தில் தான் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பாலகிருஷ்ணன் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் மணவளநகர் காவல் நிலையத்திற்குக் கிராம மக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரகாசன் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

பாண்டியன் சிறு வயது முதலே மனநலம் குன்றியவர் எனவும் அடிக்கடி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று வந்ததாகவும் தெரிகிறது. மேலும் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் மணவாளநகர் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாண்டியன் தனது தந்தை பாலகிருஷ்ணனிடம் மெழுகுவர்த்தி கேட்டுள்ளார். மெழுகுவர்த்தி கொடுக்க தாமதம் ஏற்பட்டவே, கோபமடைந்த பாண்டியன் வீட்டு மாடியில் வைத்து தனது தந்தையைக் கட்டையால் அடித்து கையை உடைத்துள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மேலும் தலைப் பகுதியில் கத்தியால் வெட்டியதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பாண்டியன் கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். மெழுகுவர்த்தி கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் மகனே தந்தையை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+