வட இந்தியர்கள் ரேஷன் வாங்கலாம்.. ஆனால் தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கக் கூடாது.. சுப.வீரபாண்டியன்!

தமிழ்நாட்டில் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கக் கூடாது என்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அதேபோல் வட இந்தியர்கள் வாக்களிக்க விரும்பினால் சொந்த மாநிலம் சென்றுதான் வாக்களிக்க வேண்டும் என்றும் சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இந்தி பேசியதற்காக கழுத்தறுத்து கொல்லப்படுவதாகவும் கூறி போலியான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

வட இந்திய தொழிலாளர்கள்

வட இந்திய தொழிலாளர்கள்

பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வதந்தி, வட இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பல முன்னணி வட இந்திய ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்டன. அதுமட்டுமல்லாமல் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் வட இந்திய தொழிலாளர்கள், அச்சத்தால் வெளியேறுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன.

பரவிய வதந்தி

பரவிய வதந்தி

இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆதாரங்களுடன் இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். அதேபோல் வட இந்திய தொழிலாளர்கள் தாக்குதல் தொடர்பாக வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மற்றும் பிரபல நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் டெல்லி மற்றும் பீகார் விரைந்துள்ளனர்.

வாக்களிக்க அனுமதியில்லை

வாக்களிக்க அனுமதியில்லை

இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலின் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு பணி செய்வதற்காக வரும் வட இந்திய தொழிலாளர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக திமுக வர்த்தக அணி சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

சுப.வீரபாண்டியன் பேச்சு

சுப.வீரபாண்டியன் பேச்சு

இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டார். இந்த கருத்தரங்கில் சுப.வீரபாண்டியன் பேசுகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலை செய்வதற்காக தமிழ்நாடு வரும் வட இந்திய தொழிலாளர்கள் ரேஷனில் அரிசி வாங்கி கொள்ளலாம். கடைகளில் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். ஆனால் ஒருநாளும் வாக்காளர்களாக மாறி வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

 வாக்களிக்க விரும்பினால்

வாக்களிக்க விரும்பினால்

எங்கிருந்து வேண்டுமானாலும் தமிழ்நாட்டிற்கு வரலாம். எங்கள் தொழிலை செய்யலாம். அவர்களின் உழைப்பை குறைத்து சொல்லவில்லை. ஆனால் தேர்தல் வந்தால், வட இந்திய தொழிலாளர்கள் வாக்களிக்க விரும்பினால் பீகாரில் இருந்து வந்தவர்கள் பீகாருக்கும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த உ.பி-க்கும் சென்று வாக்களியுங்கள். அதேபோல் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்கள், இங்கு வந்து வாக்களிக்கட்டும். அதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+