ஷாக்! கொதிக்கும் ரச அண்டாவில் விழுந்த மாணவர் துடிதுடித்து பலி! திருவள்ளூர் திருமண மண்டபத்தில் சோகம்
திருவள்ளூர்: திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரச பாத்திரத்தில் மாணவர் எதிர்பாராத விதமாக விழுந்து உயிரிழந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
இந்தக் காலத்தில் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் போதே வேலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படிக்கும் போதே இதுபோன்ற பார்ட் டைம் வேலையால் காசு கிடைக்கும் பாக்கெட் மணிக்கு உதவும் என்பதால் இளைஞர்கள் பலரும் இப்போது இதுபோன்ற வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

கேட்ரிங்: பெரும்பாலும் கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் மாணவர்கள் கேட்ரிங் வேலைகளுக்கே செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சில மணி நேரம் வேலை, அவ்வப்போது வேலை கிடைக்கும் என்பதாலேயே திருமண கேட்ரிங் வேலைகளுக்கு அவர்கள் செல்கிறார்கள். இருப்பினும், சமையலறையில் செய்யும் வேலை என்பதால் கேட்ரிங் வேலைகளிலும் பல ஆபத்துகள் இருக்கவே செய்கிறது. எளிதாக விபத்துகள் ஏற்படும் ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது.
அப்படியொரு சம்பவம் தான் இப்போது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடந்துள்ளது. அங்கே கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 23ஆம் தேதி நடந்துள்ளது. அங்கே திருமண மண்டபத்தின் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த 20 வயதான இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாகக் கொதிக்கும் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளார்.
உயிரிழப்பு: இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கே மருத்துவர் குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தது. அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அவர் எதிர்பாராத விதமாகச் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார்.
உயிரிழந்த அந்த இளைஞர் 20 வயதே ஆன சதீஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சதீஷ் அங்கே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் படித்து வந்த சதீஷ், பகுதி நேரமாக அங்கே இருக்கும் கேட்டரிங் சர்வீஸில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது தான் எதிர்பாராத விதமாக இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வலிப்பு: முன்னதாக கடந்தாண்டும் தமிழ்நாட்டில் கூழ் காய்ச்சும் நிகழ்வில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தது. மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் கூழ் காய்ச்சும் நிகழ்வு நடந்தது. 6 பேர் இந்த பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முருகன் என்பவருக்கு வலிப்பு ஏற்படவே நிலை தடுமாறிய அவர், அப்படியே கூழ் காய்ச்சிக் கொண்டு இருந்த மிகப் பெரிய அண்டாவில் விழுந்துள்ளார்.
அங்கிருந்த மக்கள் அவரை மீட்க முயன்ற போதிலும் அண்டாவில் கூழ் கொதித்துக் கொண்டு இருந்ததால், எளிதாக அந்த நபரை வெளியே கொண்டு வர முடியவில்லை. வெளியே எடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னரே அவர் பரிதமபாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications