கூண்டோடு காலி.. அதிமுக ஆட்சியில் வீடுகள் கட்டியதில் முறைகேடு.. 24 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக பிடிஓக்கள் உட்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பிடிஓக்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு, அரசு மானியத்தில் வீடு கட்டும் திட்டம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்து, வீடு கட்டி முடிக்கும் வரையிலான பணிகளை கண்காணித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, ஜவ்வாதுமலை ஒன்றியங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 2017-2018 ஆம் நிதி ஆண்டில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாக, அப்போதைய ஆரணி தொகுதி எம்.பி விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரணை செய்யும் லோக் ஆயுக்தா ஆணையத்தில், இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு எம்.பி விஷ்ணுபிரசாத் புகார் அளித்திருந்தார். அதில், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் (பிபிஎல்) பட்டியலில் இடம் பெற்றவர்களை தவிர்த்துவிட்டு, வசதியான நபர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர், அதற்கான ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், புகார் மனு மீது விசாரணை நடத்தி, நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார். அதன்படி, 2017-2018 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில், பிடிஓ அலுவலகங்களில் பணிபுரிந்த வந்தவாசி பிடிஓ குப்புசாமி, தெள்ளார் பிடிஓ பரணிதரன், ஆரணி பிடிஓ சீனுவாசன், வந்தவாசி துணை பிடிஓ வில்வபதி, தெள்ளார் துணை பிடிஓ ஜி.ரவிச்சந்திரன், ஜவ்வாதுமலை துணை பிடிஓ அன்பழகன், வந்தவாசி உதவி பொறியாளர் ராமு, தெள்ளாறு உதவி பொறியாளர் கேசவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜவ்வாதுமலை உதவி பொறியாளர்கள் தமிழ்செல்வன், நிர்மல்ராஜ், வந்தவாசி துணை பிடிஓக்கள் வெற்றிவேல், மணிகண்டன், தெள்ளார் துணை பிடிஓ மணிபாலன், ஜவ்வாதுமலை துணை பிடிஓக்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், வந்தவாசி ஓவர்சியர் கல்பனா, தெள்ளார் ஓவர்சியர் சக்திவேல், ஜவ்வாதுமலை ஓவர்சியர்கள் ஆனந்தகுமார், வீரபத்திரன், வந்தவாசி ஒன்றியம் ஒழப்பாக்கம் ஊராட்சி செயலாளர் சேகரன், கீழ்நர்மா ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், சித்தருகாவூர் ஊராட்சி செயலாளர் ராமஜெயம், ஜவ்வாதுமலை நம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி, பலாமரத்தூர் ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகிய 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2017- 2018 காலகட்டத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளை நேரில் விசாரணை செய்து, தகுதியுள்ள நபர்களா என்றும் அவர்கள் எவ்வாறு இத்திட்டத்தில் இடம் பெற்றனர், ஆவணங்கள் சரியாக உள்ளதா, திட்ட நிதி முறையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதா என்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிவில், இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது தெரியவரும். மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது












Click it and Unblock the Notifications