நித்தி கம்மிங்.. கைலாசாவில் குருபூர்ணிமா! “நித்தியானந்தா” நிச்சயம் வராராம் -அடித்துசொல்லும் சீடர்கள்
திருவண்ணாமலை: கிரிவலம் சென்ற நித்தியானந்தா சீடர்கள் குருபூர்ணிமா விழாவில் நித்தியானந்தா நிச்சயம் கலந்துகொள்வார் என்று கூறியுள்ளனர்.
சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமான நித்தியானந்தா, கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் தோன்றினார்.

கைலாசாவில் நித்தியானந்தா
கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி கொடி, சின்னம், அமைச்சகங்களை அறிவித்த நித்தியானந்தா, பாஸ்போர்ட் பெறவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் தேடப்படும் நித்தியானந்தா எப்படி தப்பினார்? கைலாசா எங்கிருக்கிறது? ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்துகொண்டே பேசுகிறாரா? என்றெல்லாம் சந்தேகங்கள் எழத் தொடங்கின.

வைரலான பேச்சுக்கள்
கைலாசா ஆப்பிரிக்கா அருகே உள்ள ஒரு தீவு என்ற ஒரு தகவலும் பரவியது. கைலாசா என்ற யூடியூப் சேனலில் நித்தியானந்தா தனது பக்தர்களுக்கு உபதேசம் வழங்கும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வந்தன. அவரது பேச்சுக்கள் அனைத்தும் தினசரி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி நகைச்சுவையையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அடுத்த சில மாதங்களில் நித்தியானந்தா குறித்தும், கைலாசா குறித்தும் எந்த தகவலும் வெளிவரவில்லை.

நித்தியானந்தா உடல்நிலை
இதற்கிடையே கடந்த சில வாரங்கள் முன்பாக நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் பரவியது. அவர் சமாதி நிலைக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நித்தியானந்தாவின் சீடர்கள் இரு முடியை கையில் ஏந்தியவாறு ஓம் நித்யானந்தா பரமசிவம் என்ற மந்திரத்தை உச்சரித்தவாறு கிரிவலம் வந்தனர்.

சீடர்கள் நம்பிக்கை
அப்போது பேசிய அவர்கள் வரும் ஜூலை 13 ம் தேதி நித்தியானந்தா சமாதி நிலையில் மேற்கொண்டுள்ள தியானத்தில் இருந்து வந்து பக்தர்கள் மத்தியில் சத்சங்கம் செய்ய உள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவித்தனர். பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக பெங்களூர் வரை சென்று கைலாசாவின் குருபூர்ணிமா விழாவில் கலந்து கொண்டு நித்தியானந்தாவின் சத்சங்க பேச்சை கேட்க உள்ளதாக அவர்கள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications