இந்தா ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. திருவண்ணாமலையில் செங்கல் வைத்து வழிபாடு செய்யும் ஆந்திர பக்தர்கள்
திருவண்ணாமலை: உலகப் புகழ்பெற்ற சிவ வழிபாட்டு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சமீப காலமாக "செங்கல் வைத்து வழிபாடு" என்ற புதிய நம்பிக்கை பக்தர்களிடையே வேகமாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் இந்த நடைமுறையை அதிகளவில் கடைபிடிப்பதால் செங்கல்கள் குவிந்து வருகின்றன.
அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில நாட்களாக செங்கல்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்யும் முறை அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோயில் வளாகத்தில் செங்கல்களை அடுக்கி வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த வழிபாட்டின்படி, பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனதில் நினைத்து ஒரு செங்கல்லை எடுத்து குறிப்பிட்ட இடங்களில் வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

வீடு கட்டுதல், நிலம் வாங்குதல், குடும்ப பிரச்சனைகள் தீருதல் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையால் பலர் இந்த செங்கல் அடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் ஏராளமானோர் இந்த முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதனால் கோவில் சுற்றுப்பகுதிகளில் செங்கல்கள் குவிந்து காணப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செங்கல்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழிபாட்டுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்றும், கோவில் நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களிலும் வைரலாகி, பக்தர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications