திருவண்ணாமலை மண் சரிவு.. புதைந்த வீட்டில் இருந்த 7 பேர் கதி என்ன? அதிகாலை முதல் மீட்புப் பணி தீவிரம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முழுமையாக மண்ணில் புதைந்துள்ள நிலையில் அந்த வீட்டில் இருந்த 7 பேரின் நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. மீட்புப் பணிக்காக 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வந்துள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தொடர் கனமழையின் காரணமாக, திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மண் அரிப்பு காரணமாக திருவண்ணாமலை மலையில் இருந்து ராட்சதப் பாறை ஒன்று சரிந்திருக்கிறது. இதனால், பெரும் மண் குவியல் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் மக்களின் வீடுகளின் மீது சரிந்திருக்கிறது.

35 டன் எடை கொண்ட ராட்சதப் பாறை, சுமார் 20 அடி சரிந்து, வீடுகளை மூடியுள்ளது. இந்தச் சம்பவத்தில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. மேலும், 2 வீடுகளும் மண் சரிவுக்குள் சிக்கியுள்ளன. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர்.
ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள் இருந்துள்ளனர். அங்கு கவுதம், இனியா என 2 சிறார்கள் இருப்பதால், பக்கத்து வீடுகளைச் சேர்ந்த தேவிகா, வினோதினி உள்ளிட்ட 3 பேர் அங்கு விளையாடுவதற்காக வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் ராட்சதப் பாறை சரிந்து, கடுமையான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமார் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு விரைவாகச் சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
ஆனால், மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மண்ணை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடும்போது, ராட்சத பாறை சரிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு (NDRF) தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நள்ளிரவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர். மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க மோப்ப நாயைப் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதற்காக, மோப்ப நாய்கள் ரூபி, மிர்ஸி ஆகியவையும் வரவழைக்கப்பட்டன.
மேலும், அரக்கோணத்தில் இருந்தும் ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக் உள்ளிட்ட மீட்புப் பணிக்கான சில உபகரணங்களையும் வரவழைத்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், அந்த வீடு அமைந்துள்ள பாதை குறுகலாக இருப்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வர முடியாத சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
இரவில் மழை தொடர்ந்து வந்ததாலும், மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் மீட்பு பணி தொடங்கவில்லை. இந்நிலையில் இன்று விடியற்காலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் தீயணைப்புப் படையினர் மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications