திருவண்ணாமலை மகா தீபம்.. கோயிலுக்குள் 11,500 பக்தர்களுக்கு அனுமதி! ஆன்லைனில் டிக்கெட் பெற முடியுமா?
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் அடுத்த மாதம் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. இதற்கிடையே பரணி தீபத்துக்கு கோயில் உள்ளே 7,500 பக்தர்களுக்கும் மகா தீபத்தின் போது 11,500 பக்தர்களுக்கும் கோயிலில் அனுமதி தரப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோயில்.. இந்தாண்டு அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 1 முதல் 17ம் தேதி வரை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் அங்கு நடந்து வருகிறது. இது குறித்த ஆய்வுக் கூட்டம் அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை நடந்த நிலையில், அதில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். முன்னேற்பாடு பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
திருவண்ணாமலை ஆட்சியர்: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தாண்டு அண்ணாமலையார் கோயில் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுகிறது. இந்த கார்த்திகை தீப திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இதற்காக பல்வேறு துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்துள்ளது.
அண்ணாமலையார் கோயிலில் வரும் டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றம் நடக்கும் நிலையில், தொடர்ந்து டிசம்பர் 10ம் தேதி மகா தேரோட்டமும், டிசம்பர் 13ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளன. இந்தாண்டு கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர்கள் எளிதாகக் கோயிலுக்கு வந்து செல்ல வசதியாகப் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
எத்தனை பேருக்கு அனுமதி: பரணி தீபத்துக்குக் கோயில் உள்ளே 7,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல மகா தீபத்தின் போகு 11,500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைத் தரிசிக்க 2 ஆயிரம் பக்தர்களுக்கு மலையேற அனுமதி தரப்படும். உடல் பரிசோதனை அடிப்படையில் அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
ஆன்லைனில்: இது தவிர கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் எனப் பரணி தீபத்துக்கு 5200 பேரும், மகா தீபத்துக்கு 8000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். இதில் பரணி தீபத்திற்கு 500 பேருக்கும் மகா தீபத்துக்கு 1100 பேருக்கும் ஆன்லைனில் அனுமதி தரப்படும்.
மருத்துவக் குழு: கோயிலில் இதய மருத்துவரைக் கொண்ட 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். மொத்தம் 85 மருத்துவக் குழுக்கள் பணியில் இருப்பார்கள். தேவையான இடத்தில் மட்டும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், அண்ணாமலையார் தேர் வெள்ளோட்டம் மற்றும் மகா தேரோட்டத்தின் போது பாதுகாப்பு கருதி மாட வீதியில் மின்சாரம் துண்டிக்கப்படும்" என்றார்.
மேலும், இந்த நாட்களில் தங்கும் விடுதிகள் மற்றும் ஆட்டோவில் வழக்கமான கட்டணமே வசூலிக்க வேண்டும் என்றும் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications