லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் சாத்தியமா? கையும் களவுமாக சிக்கி கைதான விஏஓ.. தீர்வு என்ன?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளார்கள். இதுபோல் சில அதிகாரிகள் அடிக்கடி கைதாகிறார்கள்.. உண்மையில் லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியுமா? என்று கேட்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிக பணம் புழங்கும் துறைகள் என்றால் அது பத்திரப்பதிவு துறையும், வருவாய் துறையும் தான். பத்திரம் வாங்கியவர்கள் பட்டா வாங்க வேண்டும் என்றால் வருவாய் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தால் பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும். ஆனால் இன்று வரை பட்டா பெயர் மாற்றம் செய்ய பல ஊர்களில் லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் உள்ளது.

லஞ்சம் கொடுத்தாவது பட்டா வாங்கிவிடலாம் என்று சிலர் அமைதியாக கடந்துவிடுகிறார்கள். சிலர் கோபம் அடைந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கிறார்கள். குறிப்பிட்ட அதிகாரி கைதாகி சஸ்பெண்ட் நடவடிக்கைக்கும் உள்ளாகிறார். ஆனாலும் லஞ்சம் கொடுக்காமல் பட்டா பெயர் மாற்றம் செய்வது இன்று வரை சவாலாகவே இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதேநேரம் கைது நடவடிக்கையும் தொடரத்தான் செய்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் அருகே ஆத்துரை கிராமம் பண்டார கிணற்று தெருவை சேர்ந்த சேகர் என்ற விவசாயிக்கு 2 ஏக்கர் 75 சென்ட் நிலம் உள்ளது. இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் 3 பேருக்கு திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். மகன் மாணிக்கம் என்பவருடன் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இதில் மாணிக்கம் டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். மேலும் தந்தைக்கு உதவியாக நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 25.10.2023 அன்று சேகர் சார்பதிவாளர் அலுவலகம் மூலம் 50 சென்ட் நிலத்தை தனது மகன் மாணிக்கத்துக்கு கிரையம் செய்து கொடுத்தார். இதையடுத்து மாணிக்கம் கடந்த 13.2.3024 அன்று தேவிகாபுரத்தில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று 50 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார்.
இதையடுத்து ஆன்லைனில் வந்த அப்ளிகேசனை பார்த்து, விவசாயி மாணிக்கத்தை ஆத்துரை கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் அழைத்து பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டாராம்.. அதற்கு மாணிக்கம் அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்திவிட்டேன். கூலி வேலை செய்வதால் ரூ.3 ஆயிரம் பணம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டாராம்.
தொடர்ந்து 2 மாதங்கள் ஆகியும் பெயர் மாற்றம் செய்யப்படாததால் கடந்த 3-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு மாணிக்கம் சென்றிருக்கிறார். அங்கு அவர் இல்லை. தேவிகாபுரம் சென்றுள்ளதாக உதவியாளர் தெரிவித்தார். இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது ரூ.3 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் பட்டா பெயர் மாற்றம் செய்ய பரிந்துரை செய்து விஏஓ திட்டவட்டமாக கூறினாராம்.
இதனால் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத மாணிக்கம் நேற்று முன்தினம் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனிடம் கொடுக்குமாறு கூறினார்கள்.
அதன்பேரில் நேற்று காலை சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனிடம் விவசாயி மாணிக்கம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications