திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டு வாசலில்.. இளைஞர் செஞ்ச வேலை.. திடுக்கிட்ட திருவாரூர்!

Subscribe to Oneindia Tamil

திருவாரூர் : திருவாரூரில் திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டு வாசலில் இளைஞர் ஒருவர் திடீரென விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே திரு.வி.க. நகரை சேர்ந்த சையது உசேன் என்பவரது மனைவி ரெஜினா பேகம்(வயது 34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், ரெஜினா பேகம் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

 A young man suddenly died at the doorstep of a woman who refused to marry in Thiruvarur

திருவாரூரை சேர்ந்தவர் செல்வகணபதி(31). சையது உசேனின் நண்பரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள்
இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் ரெஜினா பேகத்துக்கு அனைத்து உதவிகளையும் செல்வகணபதி செய்திருக்கிறார். மேலும் அவர் ரெஜினா பேகத்தை திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு ரெஜினா பேகத்தின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரெஜினா பேகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று வசித்து வருகிறார். இதனால் அவர் செல்வகணபதியின் செல்போன் அழைப்புகளை எடுக்கவில்லையாம். இதனால் செல்வகணபதி மனவேதனை அடைந்தார்.

விரக்தி அடைந்த செல்வகணபதி வியாழக்கிழமை இரவு திரு.வி.க. நகரில் உள்ள ரெஜினா பேகத்தின் வீட்டு வாசலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வகணபதியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். திருமணம் செய்ய மறுத்த பெண் வீட்டு வாசலில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+