தயவு செஞ்சு அந்த பிச்சை காசை வாங்காதீங்க.. வாக்காளர்களுக்கு திவாகரன் கோரிக்கை
பிச்சை காசு வாங்கி ஓட்டு போடாதீங்க என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி: "500, 1000 ரூபாய் வாங்கிக்கிட்டு வாக்களிப்பது என்பது மக்கள் வாழ்க்கையையே பணயம் வைப்பது போன்றது... அதனால் தயவு செய்து அந்த பிச்சைக்காசு வாங்காதீங்க" என்று திவாகரன் தெரிவித்துள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் அண்ணா திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:
தேர்தலுக்கு பிறகு அமைகின்ற அரசு லஞ்சம் ஊழலற்ற அரசாக அமைய வேண்டும். தேர்தல் சமயத்தில் செய்யப்படும் ரெய்டு எல்லாம் ஒரு மாயைதான். மேகதாது அணை கட்டுவதற்கு அதிமுக பிரமுகர்களே மணல் அடித்து தருகிறார்கள்.

ஓட்டுக்கு 500, 1000 ரூபாய் வாங்கிக்கிட்டு ஓட்டளிப்பது என்பது மக்கள் வாழ்க்கையை பணயம் வைப்பது போன்றது. தயவு செய்து அந்த பிச்சைக்காசை வாங்காதீங்க.
தமிழ்நாட்டில் பாலியல் தொந்தரவு இதுவரை இந்த அளவுக்கு இருந்ததில்லை. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதுக்கு காரணம் ஒரு அமைச்சரின் மீது பாலியல் குற்றச்சாட்டு ஏற்பட்டதுதான். ஆனால் அதையும் யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அதை யாரும் முடித்து வைக்கவும் இல்லை.
அமைச்சர் மீது விசாரணை நடத்தினால்தானே தவறு செய்பவர்கள் பயப்படுவார்கள்? அதனால்தான் இப்போ நிறைய இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடந்துகொண்டிருக்கிறது" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications