பேருந்துக்காக நின்றிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 3 பேர் உயிரிழப்பு! உடுமலைப்பேட்டையில் சோகம்
திருப்பூர்: திருப்பூர் உடுமலையில் கார் கவிழ்ந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் இருந்து கேரளா நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றுக்கொண்டிருந்திருந்தது. பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்த கார், அங்கிருந்த வேகத்தடை மீது மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதியிருக்கிறது.

இந்த விபத்தில் அங்கு நின்றிருந்த மோகன்ராஜ் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜகோபால், ரங்கசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வேகமாக வந்ததே விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications