வட மாநிலத்தவர் போல நடித்து சட்டவிரோதமாக வேலை பார்த்த வங்கதேச நபர்கள் திருப்பூரில் கைது!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனா். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல நடித்து திருப்பூரில் அவர்கள் வேலைக்குச் சேர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் நகரில், வடமாநிலத்தினர் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவி வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், திருப்பூர் மாநகர போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

tirupur bangladesh tamil nadu


திருப்பூர் தெற்கு காவல் துறையினர் மற்றும் அதிவிரைவுப் படையினர், திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த வெளிமாநில தொழிலாளா்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த 6 பேரின் ஆவணங்களைப் போலீசார் பரிசோதித்தனர். அதில் அவர்களிடம் வங்கதேச நாட்டின் அடையாள ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, நடத்திய விசாரணையில் அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த சவுஷன் ஷேக் (38), முகமது ராகுல் அமின் (30), முகமது அல் இஸ்லாம்(36), முகமது அஸ்லம் (41), ராசிப் கவுன் (43), தன்வீர் (39) என்பது தெரியவந்தது.

இந்த 6 பேரும் கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்துக்கு வட மாநிலத் தொழிலாளர்கள் போல வேலை கேட்டு வந்துள்ளனர்.

அந்த நிறுவனத்தைச் சோ்ந்தவர்கள் இவா்களின் அடையாள ஆவணங்களை கேட்டபோது அவர்களிடம் ஆதார் அட்டை இல்லாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவா்களை வேலைக்கு பணியில் சேர்க்காமல் அங்கிருந்து அனுப்பி உள்ளனர்.

இதையடுத்து, பல்லடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிக்குச் சோ்வதற்காக வந்தபோது அவர்கள் காவல் துறையினரிடம் பிடிபட்டுள்ளனர். இந்த 6 பேரையும் கைது செய்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த 6 பேரும் கவுகாத்தி வழியாக சென்னை வந்து, அதன்பின் ரயிலில் திருப்பூக்கு வந்து, ஊத்துக்குளி அருகே பனியன் நிறுவனத்தில் வேலை செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், ஆறு பேரையும் பனியன் நிறுவன உரிமையாளர் வேலையில் இருந்து நிறுத்திய நிலையில் தான் திருப்பூர் பகுதியில் வேலை தேடித் திரிந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+