யார்னு பாத்தீங்களா.. தீர்த்தக்குடத்தை தலையில் வைத்து.. எம்எல்ஏ ஆட்டம் இருக்கே.. திணறிய திருப்பூர்
கோயில் திருவிழாவில் தீர்த்தக்குடம் ஏந்தி வந்தார் அதிமுக எம்எல்ஏ
திருப்பூர்: அம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குடத்தை ஏந்தி கொண்டு, திருப்பூர் எம்எல்ஏ ஆடிய நடனம் காண்போரை ஈர்த்தது..!
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டதால், அதற்கான விழாக்களும் தமிழகம் முழுவதும் களை கட்ட ஆரம்பித்துவிட்டது..
தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் பொங்கல் விழாக்கள் நடந்து வருகின்றன.. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.

கோயில்
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அங்கேரி பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலும் விழா நடந்து வருகிறது.. இது ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த கோயிலாகும்.. இங்கு வருடந்தோறும், மார்கழி மாதத்தில் பொங்கல் திருவிழா விமர்சையாக நடத்துது வழக்கமாகும்.. இந்த கோயில் பண்டிகைக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் திரண்டு வருவார்கள்.

வானவேடிக்கை
மேலும் இந்த திருவிழாவுக்காக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதையும் இந்த பகுதி மக்கள் வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழா வானவேடிக்கையுடன் நேற்றிரவு துவங்கியது.. களைகட்டியது.. அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய அதிக மக்கள் குவிந்தனர்.. ஏராளமானோர் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.

டான்ஸ்
அப்போது திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏ கே.என் விஜயகுமார் தீர்த்தக்குடம் எடுத்து வந்தார்.. ஆனால், அவர் வரும்போது கையில் வேப்பிலை அடித்து ஆடிக்கொண்டே வந்தார்... அவர் டான்ஸ் ஆடுவதை பார்த்து குழந்தைகளும் பெண்களும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தபடியே அவர்களும் ஆடியபடியே வந்தனர். இவரது வருகையை அந்த ஊர் மக்கள் நீண்ட நேரமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்..

தீர்த்தக்குடம்
காரணம், வருடா வருடம் தீர்த்த குடத்தை தலையில் வைத்து கைகளில் வேப்பிலையை எடுத்துக்கொண்டு ரோட்டில் உற்சாகமாக ஆட்டம் போடுவது இவரது வழக்கம். அந்த பகுதியின் மேளத்துக்கு ஏற்ப எம்எல்ஏ டான்ஸ் ஆடுவதை பார்க்கவே பொதுமக்கள் திரண்டு வருவார்களாம்.. தன்னுடைய தனது சொந்த ஊர் கோவில் விசேஷத்திற்காக எம்எல்ஏ ஒருவர் தீர்த்தக்குடம் எடுத்து நடனம் ஆடியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது..

வேப்பிலை
அப்போது ஊர்வலத்தில் திருப்பூர் வடக்கு எம்எல்ஏ. கே.என். விஜயகுமார் தீர்த்த குடத்தை தலையில் வைத்து கைகளில் வேப்பிலையை எடுத்துக்கொண்டு ரோட்டில் உற்சாகமாக ஆட்டம் போட்டார்.அந்த பகுதியின் மேளத்துக்கு ஏற்ப எம்.எல்.ஏ., ஆடியதை பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். தனது சொந்த ஊர் கோவில் விசேஷத்திற்காக எம்எல்ஏ ஒருவர் தீர்த்தக்குடம் எடுத்து நடனம் ஆடியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.. இந்நிலையில், மாவிளக்கு எடுத்து, பொங்கல் வைத்து வழிபாடு இன்று நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications