திகைத்த திருப்பூர்.. திருவிழாவுக்கு சென்ற 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்! அதிமுக நிர்வாகி கைது
திருப்பூர்: கோயில் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சென்ற சிறுமையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயிலில் அமைந்துள்ளது வீரக்குமாரசாமி கோயில். இந்த கோயிலின் திருவிழா கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு திருவிழாவையொட்டி பாட்டு கச்சேரி நடந்துள்ளது. இதனை கண்டு மகிழ சென்ற 17 வயது சிறுமி, மகிழ்ச்சியோடு வீடு திரும்பவில்லை. காரணம் 6 பேர் கொண்ட அரக்க கும்பல் செய்த காரியம். ஆம் திருவிழாவில் பாட்டுக் கச்சேரியை காண வந்த அந்த 17 வயது சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள் இந்த 6 பேரும்.

ஏராளமான மக்கள் கலந்து கொண்ட இந்த பாட்டு கச்சேரியில் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தாயுடன்தான் வந்துள்ளார். ஆனால் அந்தக் கலை நிகழ்ச்சி நிறைவடைவதற்கு நேரம் ஆனதால், சிறுமியை அவரது தோழியுடன் விட்டுவிட்டு தாய் தனியாக வீடு திரும்பி இருக்கிறார். திருவிழா கச்சேரியில் இருந்த தன்னுடைய மகள் சில மணி நேரத்தில் வீடு திரும்புவார் என எதிர்பார்த்து காத்திருந்தார் அந்த தாய். ஆனால் நடந்ததோ வேறு. இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் ஒரு விதமான அச்சம் தாயை தொற்றிக் கொண்டது.
பதற்றத்தோடும் பதைபதைப்போடும் தன்னுடைய மகளை தேடி ஊர் முழுவதும் அலைந்து திரிந்துள்ளார் இரவு நேரத்தில். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மறுநாள் காலை சிறுமி வீடு திரும்பி இருக்கிறார். ஆறுதலோடு அவரை அரவணைக்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய மகள் தெரிவித்த விஷயம் தாயின் உள்ளத்தை உறைய வைத்திருக்கிறது. தனக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமி ஒவ்வொன்றாக விவரிக்க பேரதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று இருக்கிறார் அந்தப் பெண்மணி.
பாட்டுக் கச்சேரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது ஒரு கும்பல் தன்னை விரட்டி வந்ததாக அவர் கூறியிருக்கிறார். இரு சக்கர வாகனத்தில் இருவர், காரில் 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்திச் சென்று தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தாயிடம் கூற செய்வதெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளார் அவர். தன்னுடைய மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரம் குறித்து வெள்ளக்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் விசாரணையை தொடங்கிய போலீசார் காமராஜபுரத்தை சேர்ந்த பிரபாகர் மற்றும் செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 5 பேர் சிக்கினர். சதீஷ், நவீன் குமார், நந்தகுமார், தினேஷ், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்த குற்றத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் கைது செய்யப்பட்ட ஒருவர் அதிமுக நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆம், கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவரான தினேஷ் என்பவர் அதிமுக ஐடி விங் நிர்வாகியாக உள்ளார். இவரது தந்தையும் அதிமுகவில் இருப்பதாக கூறப்படுகிறது. கோயில் திருவிழா கலைநிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications