Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பத்தூரே திகைச்சிடுச்சு.. "ஆடாக" இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி..தயாநிதி மாறன் சுருக்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்திருக்கும் தயாநிதி மாறன், பாஜக சொல்வதையெல்லாம் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

3 நாளைக்கு முன்பு, நீட் தேர்வு குறித்து, திமுக எம்.பி.யும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான தயாநிதி மாறன் பேசியிருந்தது, சோஷியல் மீடியாவில் பெரிதும் வைரலாகியிருந்தது.

Dayanidhi Maran has criticized BJP Government and TN BJP Leader Annamalai in Tirupathur

தயாநிதி மாறன்: "அனிதா இறந்தபோது ஒவ்வொரு பெற்றோரும் கதிகலங்கி, கண்கலங்கி நின்றார்கள்.. அந்த பெற்றோர்களில் நானும் ஒருவன். என் மகளை, டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று என் மனைவி சொன்னார்.
அதற்கு நான், "நீ ஏன்..ம்மா கவலைப்படறே? என் தாத்தா கலைஞர், எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கார். என் அப்பா எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கார்.. என் மாமா ஸ்டாலின், எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கார்.. அவ்வளவு ஏன்? நானே மந்திரியாக இருக்கும்போது, எத்தனையோ பேருக்கு சீட் வாங்கி தந்திருக்கேன்.. அப்படியிருக்கும்போது, என் பொண்ணுக்கு நான் வாங்கித்தர மாட்டேனா? என்று மார்தட்டினேன்..

டாக்டர் சீட்: 2017ல் என் மகள் பிளஸ் டூ முடித்தபோது, நீட் தேர்வும் வந்தது. ஆனால் என் மகளுக்கு என்னால் உதவி செய்ய முடியல.. என் மகள் என்னிடம் வந்து கேட்டார். "டாக்டர் சீட் வாங்கி தரேன்னு சொன்னியே அப்பா.. உன்னால்தானே நான் ஸ்டேட் போர்டில் படிச்சு நல்ல மார்க் வாங்கிருக்கேன். இப்போ எனக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தா" என்றார்.

அந்த நிமிடம் என் இயலாமையை பார்த்து நான் கண்கலங்கி நின்றேன்.. என்னுடைய சொந்த மகளுக்கே, மருத்துவ படிப்புக்கு என்னால சீட் வாங்கித் தர முடியலை. பிறகு, 2017ம் அனைத்து பெற்றோர்களும் சேர்ந்து வழக்கு போட்டோம்.. அதற்கு பிறகு, என்னுடைய மகளை மலேசியா சென்று மருத்துவ படிப்பு படித்தார்.. ஆனால் இந்த நிலை மாற வேண்டும். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக இந்த போராட்டம் ஒரே நாளில் முடியாது. இது ஒரு தொடர் போராட்டம்" என்று தயாநிதி மாறன் பேசியிருந்தார்.

திருப்பத்தூர்: இந்த பேச்சு இன்னமும் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், திருப்பத்தூரில் பாஜகவை மீண்டும் விமர்சித்து பேசியிருக்கிறார் தயாநிதி மாறன். "பாஜக சொல்றதெல்லாமே பொய்" என்றும் கூறியிருக்கிறார்..

திருப்பத்தூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கிரிக்கெட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு தயாநிதிமாறன் பரிசுகளை வழங்கினார்..

நம்பாதீங்க: அப்போது அவர் பேசும்போது, "தமிழகத்தில் பொய் சொல்லும் நபர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.. அது ஆடாக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் பொய் சொல்லி வருகின்றனர்... பாஜகவினர் சொல்வதை யாருமே நம்ப வேண்டாம். நீங்க வேணும்னா, அதையெல்லாம் கூகுளில் சர்ச் செய்து பாருங்கள்.. அவர்கள் சொல்லுவதை நம்பி, ஏமாற வேண்டாம்.. பொய்களை சொல்கிறது பாஜக.

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இளைஞர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகளையும் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது" என்றார் தயாநிதி மாறன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+