திடீரென வானில் தோன்றிய அதிசயம்.. சூரியனை சுற்றி கலர் கலராய்.. திருப்பூரில் என்ன நடந்தது?
சூரியனை சுற்றி ஒளிவட்டம் பல வண்ணங்களில் வானில் திடீரென தோன்றியது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வானில் சூரியனை சுற்றி அதிசயம் நிகழ்ந்தது.. இந்த காட்சிதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் சூரியனை சுற்றி வானவில் நிறத்தில் பல வண்ண ஒளிவட்டம் தோன்றியது.. வானத்தில் தெளிவாக இந்த காட்சி தெரிந்தது
ஒளி வட்டம் வானவில் போல, அதுவும் கலர் கலராக காட்சி தென்பட்டது.. இதை பார்த்ததும் பொதுமக்கள் ஆச்சயரிப்பட்டு போனார்கள்..

பல வண்ணங்கள்
வெளிப்புறம் இளம்பழுப்பு நிறத்திலும், உள்பக்கமாக பல வண்ண நிறத்திலும் கலந்து காணப்பட்டது.. இந்த ஒளிவட்டம் 11.25 முதல் 12.40 வரை சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்தது... அதாவது இந்த ஒளிவட்டம் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது... இப்படி சூரியனை சுற்றி ஒளி வட்டம் ஏற்படுவதை சிலர் அகல் வட்டம் என்று சொல்வார்கள்.. பெரும்பாலும் வெயில் காலத்தில் இப்படி ஏற்படுவது வழக்கமாம்.

பனிக்கட்டி துகள்கள்
வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழை மேகங்கள், உயரத்தில் செல்லும்போது பனிக்கட்டி துகள்களாக மாறி, அதன் மீது சூரிய ஒளி பட்டு, ஒளி விலகல் அடையும்.. அந்த நிகழ்வுதான் இது என்கிறார்கள்.. இதை பற்றி திருப்பூர் அறிவியல் இயக்கத்தினர் சொல்லும்போது, "கோடை காலத்தில் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் மழை மேகங்கள் மிக உயரத்தில் செல்லும்போது பட்டக வடிவில் பனிக்கட்டி துகள்களாக மாறும்.

பனிக்கட்டிகள்
அதன் மீது படும்சூரிய ஒளி பிரதிபலித்து, ஒளி விலகல் அடையும் .. 22 டிகிரி அளவில் ஒளி விலகல் அடையும்போது சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டால், அது பனிக் கட்டிகள் மழையாக பெய்யும்.. மேகங்களின் வெப்பநிலை குறைந்து, அதிலிருக்கும் நீர், சிறு பனித்துகளாக மாறுகிறது.

சோலார் ஹாலோ
இதில் சூரிய ஒளி விழும்போது, வானவில்லைப் போன்ற வண்ண ஒளிவட்டத்தை ஏற்படுத்துகிறது. சோலார் ஹாலோ என்பார்கள்.. இந்த வளிமண்டல ஒளி நிகழ்வை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை... இது இயல்பான ஒன்றுதான்" என்றனர். திடீரென வானில் ஏற்பட்ட இந்த நிகழ்வை கண்டு, பொதுமக்கள் வியந்து போய் செல்போனிலும் படம் பிடித்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications