திருப்பூர் ரோட்டுல யார் பாருங்க.. பல்லு இல்லாத உனக்கு எதுக்குடா பொண்டாட்டி? ஸ்பாட்டில் நடந்த மேட்டர்
திருப்பூர்: திருப்பூரில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி உள்ளது.. இதைப்பார்த்து ஒட்டுமொத்த பேரும் அதிர்ந்து போனதுடன், வேதனையை பதிவு செய்து வருகிறார்கள்.
திருப்பூர் குமார்நகரை அடுத்துள்ளது வளையங்காடு என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் பாண்டியன்.. 36 வயதாகிறது.. இவர் ஒரு தையல் தொழிலாளி ஆவார்.. இவரது நண்பர் பெயர் காளிமுத்து. இவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான்.

காளிமுத்துவுக்கு 45 வயதாகிறது.. இவர்கள் எப்போதுமே ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடிப்பது வழக்கம்.. அப்படித்தான், சம்பவத்தன்று மதியம், திருப்பூர் காந்திநகர் அருகே 2 பேருமே மது அருந்தியிருக்கிறார்கள். 2 பேருக்குமே போதை தலைக்கு ஏறிவிட்டது.. மதியானம் தண்ணி அடிக்க டாஸ்மாக்கிற்குள் சென்றவர்கள், நைட் நேரம் ஆனபிறகுதான் வெளியே வந்தார்கள்.
தள்ளாட்டம்: 2 பேருமே தள்ளாடியபடியே வெளியே வந்தனர்.. அப்போது பாண்டியன் காளிமுத்துவை பார்த்து "பல் இல்லாத உனக்கு எதுக்குடா பொண்டாட்டி" என்று கேட்டிருக்கிறார்.. இதைக்கேட்டதும் காளிமுத்துவுக்கு கோபம் வந்துவிட்டது. உடனே பதிலுக்கு பாண்டியனை அவர் தாறுமாறாக திட்டினார்.. இதற்கு காளிமுத்து பதிலடி தந்தார்.. இப்படியே வாய் தகராறு முற்றி, கைகலப்பாகிவிட்டது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த காளிமுத்து, கீழே கிடந்த ஒரு உருட்டு கட்டையை இருட்டில் தேடி எடுத்து கொண்டு வந்தார்.. "உனக்கு பல் இருப்பதால்தானே இப்படி என்னை பேசுகிறாய்? அதனால் உன் பல்லை எல்லாம் உடைத்து நொறுக்குகிறேன் பார்" என்று சொல்லிக்கொண்டே, உருட்டுக்கட்டையால் பாண்டியனை அடிக்க போனார்.. அப்போது பாண்டியன், ரோட்டில் தரையில் படுத்திருந்தார்.. உருட்டுக்கட்டையை எடுத்து, பாண்டியன் முகத்தில் ஓங்கி அடித்தார் காளிமுத்து.
கொலைவெறி : இதில் பாண்டியனுக்கு முகமெல்லாம் சிதைந்து ரத்தம் கொட்டியது.. 5 பற்கள் 'ஆன் தி ஸ்பாட்டில்' உடைந்தது... இவ்வளவும் நடுரோட்டிலேயே நடந்து கொண்டிருந்தது.. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கொலைவெறி தாக்குதல் நடத்தி கொண்டிருந்த காளிமுத்துவை ஓடிச்சென்று தடுத்து நிறுத்தினார்கள்..

பிறகு, உடனடியாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கும் தகவல் தந்தார்கள்.. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஷாக் ரியாக்ஷன்: பின்னர் காளிமுத்துவை விசாரணைக்காக ஸ்டேஷன் அழைத்து கொண்டு போனார்கள்.. 2 பேரும் ரோட்டில் புரண்டு சண்டை போட்டதையும், உருட்டுக்கட்டையால் தாக்கி பற்கள் உடைந்ததையும், அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்.
இந்த வீடியோதான், இணையத்தில் தற்போது வைரலாக பரவி கொண்டிருக்கிறது.. இதை பார்த்து பொதுமக்களும் தலையில் அடித்து கொள்கிறார்கள்.. இந்த குடிபோதை இன்னும் எத்தனை குடும்பங்களை நாசம் செய்ய போகுதோ, தெரியவில்லை???












Click it and Unblock the Notifications