அவினாசியில் அவசரப்பட்ட கல்லூரி மாணவிகள்.. ஒரே அறையில்.. திருப்பூரை திடுக்கிட வைத்த சம்பவம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மருதாசலமூர்த்தி என்பவருடைய மகள் அவந்திகா மற்றும் அவினாசி கங்கவர் வீதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரமேஷ் என்பவரின் மகள் மோனிகா ஆகிய இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்கள். வீட்டில் உள்ள அறையில் தோழிகள் இருவரும் எடுத்த முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மருதாசலமூர்த்தி என்பவருடைய மகள் அவந்திகா (வயது 19). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவந்திகா படித்து வந்த அதே கல்லூரியில் அவினாசி கங்கவர் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 19 வயது மகள் மோனிகாவும் படித்து வந்தார்.

இருவரும் ஒரே பாடப்பிரிவில் படித்து வந்ததால் படிப்பு செலவுக்காக அவந்திகாவும், மோனிகாவும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்த பிறகு அங்குள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். நேற்று பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் அவந்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அப்போது, அவரை பார்க்க மோனிகா வந்தார்.
இந்த நிலையில், மாலையில் வீட்டில் உள்ள அறையில் தோழிகள் இருவரும் தனித்தனியாக தூக்கில் பிணமாக தொங்கினார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஒரே அறையில் தோழிகள் இருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரையில் இரண்டு நாட்களுக்கு மனைவியை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்த சிலம்பரசனுக்கு 38 வயது ஆகிறது.. இவர் தனது மனைவி அகிலாண்டேஸ்வரி (28), மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சிலம்பரன்சன் மனைவி அகிலாண்டேஸ்வரியை நேற்று முன்தினம் கொன்றுவிட்டு, சிலம்பரசன் உயிரிழந்தார். பெற்றோர்கள் இருவரும் இறந்ததால் பிள்ளைகள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications