திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாரு இது.. நீங்களா? அதிமுக புள்ளியை காரில் ஏற்றி.. பட்டப்பகலில் பரபர சம்பவம்.. விசாரித்தால் ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுகவில் உறுப்பினராக இருக்கிறார்.

இவரின் மனைவி திருப்பூர் நகர இணை செயலாளராக இருக்கிறார். இவர்களின் குடும்பம் எடப்பாடிக்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது.

நான் இணையும் அளவுக்கு அதிமுக, பாஜக தகுதியான கட்சிகளே இல்லை: சுப்புலட்சுமி ஜெகதீசன் சுளீர் பதில் நான் இணையும் அளவுக்கு அதிமுக, பாஜக தகுதியான கட்சிகளே இல்லை: சுப்புலட்சுமி ஜெகதீசன் சுளீர் பதில்

அதிமுக

அதிமுக

அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவும் நிலையில், இவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வருவதாக தெரிகிறது. அரசியல் தாண்டி சந்திரசேகர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரின் வீட்டிற்கு திடீரென போலீஸ் சீருடையில் ஒருவர் வந்துள்ளார். அவருடன் காக்கி பேண்ட், ஷூ அணிந்து மேலும் 3 பேர் வந்துள்ளனர்... அவர்கள் சந்திரசேகரிடம்.. நீங்கள் பெட்ரோல் பங்கில் முறைகேடு செய்ததாக புகார் வந்துள்ளது.

விசாரணை

விசாரணை

உங்களை அதற்காக விசாரிக்க உள்ளோம். உடனே எங்களுடன் வாருங்கள். விசாரித்துவிட்டு மீண்டும் அனுப்பிவிடுவோம். பயப்பட வேண்டும் என்று கூறி அவரை அழைத்து சென்றுள்ளனர். அவரும் விசாரணை தானே என்று நம்பி சென்றுள்ளார். ஆனால் காரில் ஏறிய பின் அவர்கள் வேறு சில விஷயங்களை பேச தொடங்கி உள்ளனர். ஆனால் இது என்ன விஷயம் என்று தகவல் வெளியாகவில்லை. சந்திரசேகரை மிரட்டுவது போல பேசி உள்ளனர்.

கடத்தல்

கடத்தல்

இதனால் சந்தேகம் அடைந்த அவர்.. யார் நீங்க.. எதுக்கு என்ன கடத்துறீங்க என்று கேட்டுள்ளார். உள்ளூர் போலீசார் சிலரை சந்திரசேகருக்கு தெரியும் என்பதால்.. அவரும் நீங்கள் என்ன ஸ்டேஷன் என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் அவர்கள் சந்திரசேகரை தாக்கிவிட்டு அங்கிருந்து அவரை கடத்திக்கொண்டு எஸ்கேப் ஆக முயன்று உள்ளனர். இதனால் சந்திரசேகர் அங்கேயே கூச்சல் போட்டு கத்தி உள்ளார். அதிமுக நிர்வாகி வீடு என்பதால் எப்போதும் வீட்டை சுற்றி ஆட்கள் இருப்பார்கள்.

போலீஸ்

போலீஸ்

இதற்குள் அந்த கும்பல் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்ல பார்த்துள்ளது. ஆனால் கும்பல் ஒன்று சேர்ந்து காரை மறித்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கும்பலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில் போலீஸ் உடையில் இருந்த நபர் சென்னையை சேர்ந்த காவல் ஆய்வாளர் அன்பழகன் என்று தெரிய வந்தது. போலீஸ் ஒருவரே இப்படி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடன் சேர்ந்து கடத்தல் சம்பவத்திற்கு உதவியாக இருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

English summary
What happened to Tirupur AIADMK leaders husband in daylight? Investigation is on
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X